புதுக்கோட்டையில் பகீர்.. வேகமாக மோதிய பைக்.. தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. 2 பேர் உயிரிழப்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பாம்பாற்று பாலத்தில் அரசு பேருந்து மீது மோட்டர் சைக்கிள் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் பேருந்து முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.
Recommended Video
தேவகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பாம்பாற்று பாலம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் அரசு பேருந்து மோதியது

மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் திடீரென தீப்பிடித்தது. இதில் பைக்கில் தீப்பற்றி அரசு பேருந்திலும் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக கீழே இறங்கினார்கள். இது பற்றி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த திருமயம் தீயணைப்பு துறையினர் தீப்பற்றி எரிந்த அரசு பேருந்தை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். இதேபோல் பைக்கில் எரிந்த தீயும் அணைக்கப்பட்டது. ஆனால் மோட்டர்சைக்கிளில் வந்த 2 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரியவில்லை. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications