பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும்... எங்கள் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது -ஹெச்.ராஜா
புதுக்கோட்டை: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடு நிகழ்ந்திருப்பது வேதனைக்குரியது என்றும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

மேலும், வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது எனவும் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியும், உமர் அப்துல்லாவும் சொந்தமாக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜக ஆதரவை கோரி மெகபூபா ஆட்சி அமைத்தது போல் தமிழகத்திலும் நிலைமை மாறும் எனத் தெரிவித்திருக்கிறார்.
யார் அரசாங்கம் அமைக்க வேண்டுமென்றாலும் பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவின்றி அமைக்க முடியாத வகையில் கட்சியை வலிமைப்படுத்தி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது தங்கள் இலக்கு என ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். இதனிடையே வரும் தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் அமர்வது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மிக உறுதியாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications