காதலனுடன் ஓடிய மகள்.. ராத்திரியோடு ராத்திரியாக கொன்று.. தீவைத்து எரித்து .. ஒரு தாயின் கொடூர செயல்!
20 வயது பெண் எரித்து கொலை செய்யப்பட்டதில் 7 பேர் கைதாகி உள்ளனர்
புதுக்கோட்டை: ராத்திரியோடு ராத்திரியாக மகளின் சடலத்துக்கு தீ வைத்து இறுதி சடங்கையும் செய்துவிட்டார் பெற்ற தாய்.. இந்நிலையில், தன்னுடைய காதலி சாவித்ரி, ஆணவ கொலை செய்யப்பட்டுவிட்டதாக, காதலன் அளித்த புகாரின்பேரில் தாய் உள்ளிட்ட 7 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் விவேக்.. இவர் ஒரு பெயிண்ட்டர்.. திருவரங்குளம் பகுதியை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணை காதலித்தார்.. சாவித்திரி புதுக்கோட்டை அரசு கல்லூரியில் 3-ம் வருடம் படித்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் திருவரங்குளம் அரசுப்பள்ளியில் பத்தாம் கிளாஸ் வரை ஒன்றாக படித்தவர்கள்.. 8 வருஷமாகவே உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளனர்.. இருவருக்கும் இப்போது 20 வந்துள்ளனர்.. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.. இந்த காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.

கண்டிப்பு
அதனால் அவரது அம்மா மகளை கண்டித்துள்ளார்.. மேலும் அவசர அவசரமாக சாவித்திரிக்கு அறந்தாங்கியை சேர்ந்த ஒருவருடன் கல்யாணமும் பேசி முடித்துள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சாவித்திரி, விவேக்கிடம் அழுதுள்ளார்.. தன்னை எங்காவது அழைத்து சென்றுவிடும்படியும், ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளும்படியும் கதறி உள்ளார்.

சாவித்ரி
இதனால் விவேக்கும் சாவித்திரியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு ஒரு வாடகை காரையும் ஏற்பாடு செய்தார். பின்னர் கடந்த 7ஆம் தேதி இரவு 2 பேரும் அந்த காரில் புறப்பட்டுள்ளனர். ஆனால், வழியில் குளித்தலையில் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.. அப்போது விவேக்கிற்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்று சொல்லி, சாவித்திரியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்தனர்.

மர்ம மரணம்
மேலும் விவேக்கிற்கு திருமண வயது எட்டும் வரை, வேறொருவரை திருமணம் செய்ய சாவித்திரியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவாதத்தினை பெற்றோரிடம் போலீசார் வாங்கி கொண்டு அனுப்பினர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சாவித்திரி பிணமாக கிடந்தார்... அவரது மர்ம மரணத்துக்கு காரணமும் தெரியவில்லை.. மேலும் சொந்தக்காரர்களுக்கும் தெரியப்படுத்தாமல், இரவோடு இரவாக சாவித்திரியின் உடலை ஒருசில உறவினர்களே சேர்ந்து எரித்து இறுதி சடங்குகளையும் முடித்து விட்டனர்.

விசாரணை
இதை பற்றி அக்கம் பக்கத்தில் கேட்டதற்கு தூக்கு போட்டு இறந்து விட்டார் என்று உறவினர்கள் சொல்லி உள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் தெரிந்து ஆவேசமடைந்த விவேக், காதலியை ஆணவ கொலை செய்து விட்டதாக புதுக்கோட்டை எஸ்பி ஆபீசில் புகார் தந்தார்.. அதனடிப்படையில் விசாரணை ஆரம்பமானது.

7 பேர் மீது வழக்கு
இதனிடையே சாவித்திரியின் சடலத்தை வருவாய்த் துறையினருக்குகூட தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக திருவரங்குளம் விஏஓ இளையராஜா மற்றொரு புகார் தந்தார். இதன்பேரில்தான் சாவித்ரியின் பெற்றோரிடம் விசாரணை ஆரம்பமானது.. பின்னர், சாவித்திரியின் தாயார் சாந்தி, பெரியம்மா விஜயா, மாமா முருகேசன், பெரியப்பா நடேசன், முருகேசன், தாய்மாமா சிதம்பரம் என 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகம்
காதலி ஆணவ கொலை செய்யப்பட்டதாக காதலர் புகார் அளித்த நிலையில், பெண்ணின் தாய் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மட்டுமில்லாமல் தமிழகம் முழுதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் மாதர் சங்கமும் தலையிட்டுள்ளது.. எப்படியாவது இறந்துபோன பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications