"கண்ணாடி சிதறல்".. அதிமுகவுக்கு "சிக்னல்" தந்த கட்சி.. இதுவே கலைஞர் இருந்திருந்தால்?.. கவனித்த திமுக
பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய பேட்டியில் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளது கவனம் பெற்றுள்ளது
புதுக்கோட்டை: எம்பி தேர்தல் நெருங்கி வரும்நிலையில், அதற்கான முன்னெடுப்பை தேமுதிக கையில் எடுத்துள்ளது.. கூட்டணி குறித்து இதுவரை எந்தஒரு இறுதி முடிவும் அக்கட்சியின் சார்பில் எடுக்கப்படாத நிலையில், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள், பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 4வது இடத்தை பெற்று, டெபாசிட்டை தேமுதிக இழந்தது என்றாலும், வரப்போகும் தேர்தலில் இக்கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாகவே ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், கடந்த 2 வருட காலமாகவே திமுகவை அந்த அளவுக்கு தேமுதிக விமர்சிக்கவில்லை. மற்றொருபுறம், அதிமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. அதிலும் இடைத்தேர்தலின்போது நடந்த பிரச்சாரத்தில்கூட, அதிமுகவையே அதிகம் சாடியிருந்தார் பிரேமலதா..

அக்ரஹாரம்
அக்ரஹாரம் என்ற பகுதியில் பிரேமலதா பிரச்சாரம் செய்தபோது அவரது பேச்சு மிகுந்த கவனத்தை பெற்றிருந்தது.. "இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த தென்னரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதுக்கு மேல் பேசுவதற்கு அங்கு எதுவும் கிடையாது. அதிமுக வேட்பாளருக்கு வயதாகிவிட்டது... ஆனால், எங்கள் வேட்பாளரை பாருங்கள்.. அவரை போல இளமையானவர் இல்லை... இங்கு அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த தென்னரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமியை பார்த்து யாராவது நல்லவர் வருகிறார் என்று சொல்வார்களா? ஆனால், கேப்டனை பார்த்து சொல்வார்கள்" என்று பிரேமலதா அதிமுகவை சாடியிருந்தார்.

விஜயகாந்த் ப்ளான்
ஆனால், தற்போது தேமுதிகவின் நிலைப்பாடு மெல்ல மெல்ல மாறி வருவதாக தெரிகிறது.. அத்துடன் அதிமுக பக்கம் சாய்வதாகவும் தெரிகிறது.. 2 நாட்களுக்கு முன்பு, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டுள்ளனர். என்ன கொடுமை இது? முன்னாள் முதல்வர் மீது இப்படியா வழக்கு போடுவார்கள்? இந்த அரசு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் வழக்கு போட நினைத்து இருந்தால் வேறு விஷயங்களில் போட்டு இருக்கலாம். ஏன் செல்போன் திருட்டு வழக்கை போடுகிறார்கள்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

கண்கூடு
இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் திமுக மீது பிரேமலதா பாய்ந்துள்ளார்.. புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் அமைச்சர் நாசர் மற்றும் தமிழக அரசுதான் விவசாயிகள் பிரரச்சினையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிகவின் ஆதரவு எப்போதுமே உண்டு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

குழம்புதே
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்ன உதயநிதி இப்போது அனிதா பெயரில் மருத்துவமனையில் பெயர் பலகை திறந்தால் போதும் என்று நினைக்கிறார். இது கண்டனத்துக்குரியது. அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு ஆதரவு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ரத்து செய்ய முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பாமல் தமிழக அரசு நீட் பிரச்சினையில் நிலையான, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஹெல்த் ஈவிகேஎஸ்
ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட பயந்து பல கட்சிகள் இருந்தபோது தைரியமாக தேமுதிக போட்டியிட்டது. ஆனால், இந்த இடைத்தேர்தல், தேர்தலே கிடையாது. இதுவரை தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளது... தேமுதிகவும் எத்தனையோ எவ்வளவோ இடைத்தேர்தல்களை சந்தித்து வந்திருக்கிறது.. ஆனால் இதுபோன்ற இடைத்தேர்தலை நாங்கள் பார்த்ததே கிடையாது.. மக்களை ஆடு, மாடுகள் போல பட்டியில் அடைத்து வைத்து கோடி கோடியாக செலவழித்து ஈவிகேஎஸ் இளங்கோவனை தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர்...

விஜயகாந்த் நச்
இப்போது, இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்படும்போது மனது வருத்தமாக இருக்கிறது.. 'நான் போட்டியிடவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை' என்று ஈவிகேஎஸ் சொன்னபோதும், வம்படியாக இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளது திமுக. ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான்... தேர்தல் ஆணையம் உள்ளதா? என்ற கேள்விக்குறி இப்போது எழுந்துள்ளது. சொந்த கட்சி நிர்வாகிகளே போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்பி வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடல்.

கலைஞர் கருணாநிதி
இதுவே, கலைஞர் உயிரோடு இருந்திருந்தால், இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இங்கே நடந்திருக்குமா? இதற்கு முதல்வர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொன்னதுபோல, தற்போது புதுச்சேரியில் பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வைப்புத்தொகை அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அமைச்சர்கள் பலரும் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.. இதுதான் திராவிட மாடல். பேராசிரியர் ஒருவரை நடுரோட்டில் அடித்து இழுத்து சென்று அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்லும் சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

நம்பகத்தன்மை
12ம் வகுப்பு, 11 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுத வராதது குறித்து, அதுவும் தமிழ் தேர்வு எழுத வராதது குறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும், அரசும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவது போல், மாணவர்கள் மத்தியில் தேர்வு குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவதால் தான் இப்போது 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது வராமல் உள்ளனர்.
அரசு 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கூடும் மேகங்கள்
அதிமுக பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப்படுத்தும்... அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும்... ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக, பாஜக விமர்சனம் செய்து கொள்வது இரண்டு கட்சியின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.. இந்த பேட்டியில், திமுக அரசை ஒன்றுவிடாமல் விமர்சித்துள்ளதுடன், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தையும் பிரேமலதா குறிப்பால் உணர்த்தியுள்ளது, மிகுந்த முக்கியத்துவத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகின்றன.. அப்படியானால் "கூட்டணி மேகங்களும்" மெல்ல சூழ்ந்து வருவதாகவே கணிக்கப்படுகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications