புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடிக்கு ஒரே அவசரம்! ஆனால்.. அது மட்டும் முடியாது! அதிமுக ஒன்னு சேரனும்! துரை வைகோ அட்வைஸ்!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : அதிமுகவை பிளவுபடுத்த பாஜக முயற்சி செய்கிறது இதனை புரிந்து கொண்டு அதிமுக நடந்து கொள்ள வேண்டும் எனவும், திராவிட கட்சி என்கின்ற முறையில் அதிமுக ஒன்று பட வேண்டும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் மதிமுக சார்பில் வைகோ குறித்த வரலாற்றுப் படமான மாமனிதன் வைகோ ஆவணப்பட திரையிடும் விழா தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆவணப்பட வெளியீட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுக திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாமனிதன் வைகோ படத்தை பார்த்தனர்.

சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.. 'இந்தி திணிப்பு’ வேண்டாம்.. பொங்கிய வைகோ! சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.. 'இந்தி திணிப்பு’ வேண்டாம்.. பொங்கிய வைகோ!

துரை வைகோ

துரை வைகோ

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ ," தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆற்றிய பணியை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தான் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வைகோ குறித்த புரிதல் பொதுமக்களிடம் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் எந்த ஒரு கட்சியையோ இயக்கத்தையோ மனதை புண்படுத்தாமல் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் இருக்காது

ஒரே நாடு ஒரே கலாச்சாரம்

ஒரே நாடு ஒரே கலாச்சாரம்

ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மதம் என்ற ரீதியில் தான் பாஜக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஒரே மொழி இந்தி மொழி என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். புதிய கல்வித் திட்டத்தில் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆறாம் வகுப்பு முதல் இரண்டாம் மொழி என்பது ஆங்கிலத்தில் தவிர்த்து இந்தியை திணித்து உள்ளதை நாங்கள் எதிர்க்கிறோம்

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

இரண்டாவது முறையாக ஆங்கிலமும் இருக்கலாம் மாணவர்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ளலாம். இரண்டாவது மொழியை தேர்ந்தெடுப்பது என்பது மாணவரின் உரிமையாக இருக்க வேண்டும் அவர்கள் என்ன படித்தால் நாம் முன்னேற முடியும் என்ற கருத்தை முன் நிறுத்தி இரண்டாவது மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிமுக

அதிமுக

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் துரை வைகோவை பார்க்கலாமா என்ற கேள்விக்கு, நான் எடுக்க வேண்டிய முடிவல்ல நிர்வாகிகளும் தொண்டர்களும் எடுக்க வேண்டிய முடிவு. எடப்பாடியை பொறுத்த வரை நாளைக்கு தேர்தல் என்றாலும் அவர் வரவேற்பார். அவருக்கு அவசரம். ஆனால் ஜனநாயகத்தை பொருத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு தான் இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ரீதியில் செல்வது என்பது ஜனநாயகத்தை புறந்தள்ளிவிட்டு சர்வாதிகாரத்தில் உச்சம் தான் என்று நான் பார்க்கிறேன். அதிமுகவை பிளவுபடுத்த பாஜக முயற்சி செய்கிறது இதனை புரிந்து கொண்டு அதிமுக நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

English summary
MDMK headquarters Secretary Durai Vaiko has said that AIADMK should understand that BJP is trying to divide AIADMK and AIADMK should join because it is Dravidian party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X