ஏசி காரில் எடப்பாடிக்கு வேர்க்குதாம்..செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்! விளாசிய அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை: பாஜக செங்கோட்டையனை ஏமாற்றி இருந்தால் தவெகவிக்கு சென்றிருக்க மாட்டார், அவர் பாஜகவின் ஸ்லீப்பர்செல் எனவும், அமித்ஷா அழைக்க மாட்டாரா? என்று இன்றைக்கும் ஏங்கிக் கொண்டிருப்பவர், தவெகவை வேண்டுமென்றால் பாஜகவுக்கு இழுத்துக் கொண்டு வரும் அசைன்மெண்டிற்கு தான் அவர் அனுப்பப்பட்டிருக்கிறார் என அமைச்சர் ரகுபதி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது. யாரை வைத்தும் யாரும் எந்த அரசியலும் செய்தாலும், மக்களுக்கு செய்கின்ற களப்பணி இதுதான் மக்கள் மனதில் நிற்கும்.

அமைச்சர் ரகுபதி
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நாலரை ஆண்டு காலமாக செய்கின்ற களப்பணிகள் திமுக கூட்டணி வெற்றிக்குத் துணை நிற்கும். தற்போதும் புனிதமான ஆட்சி தான் நடக்கிறது. எதிர்காலத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறும். கர்ச்சீப்பு போத்தி செல்கின்ற பழக்கம் எங்களுக்கு கிடையாது. அதற்கு தகுதி உடைய இந்தியாவிலேயே ஒரே அரசியல் தலைவர் முகத்தை மூடிக் கொண்டு செல்கின்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி
கார் மாறி காட்சியளிப்பவர் ஏசி காரிலேயே வியர்வை வந்து கர்சிப்பால் துடைத்தேன் என்று சொல்பவர் இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தான். தமிழ்நாடு முதலமைச்சரை போல் தைரியமிக்க வீரமிக்க முதலமைச்சர் இந்தியாவிலேயே கிடையாது. செங்கோட்டையன் பாஜக உடைய ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா இல்லையா என்பது மிக விரைவில் தெரியவரும். பாஜக அவரை ஏமாற்றி இருந்தால் தவெகவிக்கு சென்றிருக்க மாட்டார் அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.
அமித்ஷா செங்கோட்டையன்
அமித்ஷா அழைக்க மாட்டாரா என்று இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருப்பவர். தவெகவை வேண்டுமென்றால் பாஜகவுக்கு இழுத்துக் கொண்டு வரும் அசைன்மெண்டிற்கு தான் அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்து. யாருமே ஒரு கட்சியில் இருந்து வெளிவரும் பொழுது அவர்களை அழைப்பது இயற்கை. எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்கின்ற முடிவுக்கு வந்த பிறகு சேகர்பாபு நட்புரீதியில் கூட அழைத்து இருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதால்தான் அவர் வரவில்லை.
சேகர்பாபு
செங்கோட்டையன் சேகர்பாபுவை சந்திக்கவில்லை என்றால் இதை விட்டு விடலாம். எடப்பாடி பழனிச்சாமி அவரை வெறுத்து செங்கோட்டையினை விரட்டிவிட்டார். அவருக்கும் செங்கோட்டையனுக்கும் நல்ல புரிதல் கிடையாது. அதே நேரத்தில் பாஜக வோடு செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்த பொறுப்பிலும் இல்லாமல் அமித்ஷாவை போய் டெல்லியில் சந்தித்து விட்டு அதற்குப் பிறகு அவர் ஒரு முடிவு எடுக்கிறார். தினகரனோடு செல்கிறார், ஓபிஎஸ்ஸோடு செல்கிறார். சசிகலாவை செங்கோட்டையன் சந்திக்கிறார். இப்படி பல்வேறு குழப்பங்களை எல்லாம் செய்துவிட்டு கடைசியாக பாஜக உடைய ஸ்லீப்பர் செல்லாக இறுதியாக தவெகவுடன் சென்று இருக்கிறார்.
பாஜக ஸ்லீப்பர்செல்
அமலாக்கத் துறையை வைத்து ஒன்றிய அரசு மிரட்டினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் துணிச்சலும் எங்களுக்கு இருக்கிறது. நேற்றைய தினம் கூட புதுக்கோட்டையில் வரப்போவதாக கூட சொன்னார்கள். ஆனால் வரவில்லை. எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதிமுகவை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதிமுக பலவீனம் அடைந்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்த இயக்கமாக உள்ளது. " என்றார்.
-
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications