மீண்டும் விராலிமலையில் விஜயபாஸ்கர்... அமைச்சருக்காக தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுகவினர்..!
புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விராலிமலை தொகுதியில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த வாரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், விராலிமலை தொகுதியை பொறுத்தவரை எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் என்றும் தொடர்ந்து இந்த தொகுதியில் நமது கொடி தான் பறக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மாறப்போவதாக கூறப்பட்ட நிலையில் அதனை மறுக்கும் வகையில் அவர் கூறியிருக்கிறார்.

புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள விராலிமலை தொகுதி தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் அருகே தான் அமைச்சரின் சொந்தக் கிராமம் அமைந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மக்களின் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளக் கூடியவர்.
முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களாயினும் தனது தொகுதியை சேர்ந்தவர் எனத் தெரிந்தால் போதும் அவர்கள் வைக்கும் அழைப்பிதழை ஏற்று அவர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். இல்லையென்றால் அமைச்சர் கொடுத்துவிட்டதாக அவர் தரப்பில் இருந்து மொய் கவர் சென்றுவிடும். இதனால் கட்சி பேதங்களை கடந்து விராலிமலை தொகுதிக்குள் தனக்கென ஓரளவு செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மாறப்போவதாகவும் புதுக்கோட்டை அல்லது மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இது பற்றி உள்ளூர் அதிமுகவினர் சிலர் அவரிடம் நேரடியாக கேட்டு விட்டனர். ஆனால் அப்படியொரு எண்ணம் தமக்கில்லை என்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய போது அதில் தாம் தொகுதி மாறப்போவதில்லை எனவும் விளக்கியிருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications