மக்கள் மீது அக்கறை இல்லை.. மகனை மந்திரி ஆக்கவே பாஜகவுக்கு ஆதரவு.. ஓபிஎஸ்-ஐ விளாசும் டிகேஸ் இளங்கோவன்
புதுக்கோட்டை: பாஜகவுக்கு ஆதரவாக இருந்து, எப்படியாவது தனது மகனை அமைச்சராக்கிவிட வேண்டும் என்பதாலேயே ஒன்றிய அரசு என்ற சொல்லை ஓபிஎஸ் எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
திமுக அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. அப்போது முதலே மோடி தலைமையிலான பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஒன்றிய அரசு என்ற சொல் மிகப் பெரிய விவாத்தை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்றே தமிழ்நாடு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபையிலேயே கேள்வியும் எழுப்பியிருந்தார். ஒன்றிய அரசு என்று அழைப்பதில் எவ்வித குற்றமும் இல்லை என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதை மட்டுமே திமுக அரசு பயன்படுத்துகிறது என்றும் ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் விமர்சனம்
இருந்தாலும்கூட இந்த சர்ச்சையை ஓய்ந்தபாடில்லை. மத்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் இது குறித்து சட்டசபையில் அளித்த விளக்கம் பொருத்தமானதாக இல்லை என்றும் எந்த தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை என்றும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் காட்டமாக விமர்சித்திருந்தார்.

டிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில். திமுக திமுக செய்தித் தொடர்பு செயலாளரும் ராஜ்ய சபா எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஒன்றியம் என்ற சொல் சிறுமைத்தனம் என அவர்கள் பதறுகின்றனர். ஆனால் உண்மையில் ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் ஒரு சொல்.

மகனை அமைச்சராக்க முயலும் ஓபிஎஸ்
ஒன்றிய அரசு என்று அழைப்பதை ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, எப்படியாவது அவர் மகனை மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்பதற்காக அவர் இப்படிச் செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் ஏற்கனவே இரண்டு பேருக்கு இடையே தலைமைக்குப் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் இதில் இப்போது சசிகலாவும் வந்திருக்கிறார். அங்குள்ளவர்களுக்குப் பதவியில் மீது மட்டும் தான் அக்கறையே தவிர, கட்சி மீதும், மக்கள் மீதும் யாருக்கும் அக்கறை இல்லை.

நீட் விவகாரம்
திமுக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றார் விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். திமுக எப்போதும் தனது தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும். திமுக அரசு மீது பழி போட வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறக் கூடாது என்பதே திமுகவின் நோக்கம்" என்று அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications