கழுத்தில் மஞ்ச தாலியுடன் சிறுமி.. 2 மாத கர்ப்பமாம்.. ஆடிப்போன விராலிமலை.. புதுக்கோட்டையில் இப்படியா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், 17 வயது பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணயை முன்னெடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.
ஒருகாலத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த குழந்தை திருமணங்கள், குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் உட்பட ஏராளமான விழிப்புணர்வுகளுக்கு பிறகு தற்போது குறைந்து காணப்படுகிறது..

ஆனாலும் முற்றிலும் ஒழியவில்லை. கல்வியறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் இன்னமும் குழந்தை திருமணம் செய்யும் போக்கு நடந்து வருகிறது.
பெண் சிசு கொலைகள்
இதன் காரணமாக, பெண் குழந்தைகளின் சமூக வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்களது அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் சேர்ந்து பாதிக்கப்படுகின்றன.. ஏனென்றால, ஒரு குழந்தையே, இன்னொரு குழந்தையை பெற்றெடுக்கும் நிலைமை வந்துவிடுவதால், பிறக்கப்போகும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பிறக்க நேரிடுகின்றன.
இதனால், கருவுற்ற குழந்தையும் பாதிப்புகளுக்கு உண்டாகும் நிலைமையும் ஏற்படுகின்றன... அப்படியே குழந்தைகள் பிறந்தாலும், அது பெண் சிசு கொலையில் போய் முடிந்துவிடுகின்றன.
பெண்சிசு கொலை அதிகமாக நடைபெறும் மாவட்டங்களாக, விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி போன்றவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக, மேற்கண்ட மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கவனத்தையும், அக்கறையையும் செலுத்தி கொண்டிருக்கிறது.
தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவி
அப்படியிருந்தும்கூட, சில தினங்களுக்குமுன்பு, கிருஷ்ணகிரியில் ஒரு குழந்தை திருமணம் நடந்தது.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளி ஒன்றில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். மறுநாளே இந்த மாணவி, கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்திருந்தார்..
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியிடம் விசாரித்தபோதுதான், 25 வயது நபருடன் தனக்கு திருமணம் நடந்ததாக கூறினார்.. இதையடுத்து, ஆசிரியர்களே சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்து பள்ளிக்கு வரவழைத்தனர்.. மாணவியிடமும் இதுகுறித்து விசாரித்தனர்.. இறுதியில், மணமகன், பெற்றோர் உட்பட 5 பேரையும் போக்சோவில் கைது செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொடுமை
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஒரு குழந்தை திருமணம் நடந்துள்ளது.. விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு, சமீபத்தில் திருமணம் நடைபெற்றதாக போலீசுக்கு தகவல் போனது.. இதுகுறித்த தகவல் பெற்று, சமூகநலத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போதுதான் சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததும், அந்த சிறுமி இப்போது 2 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மணமகன் திருப்பதி உட்பட மூக்கன், ராணி, முத்து என மொத்தம் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் சிறுமிக்கு திருமணம்
இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பும், சென்னை அமைந்தகரையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியை மீட்க வேண்டும் என்று மாநில குழந்தைகளின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜோஸ்பின், வளர்மதி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதில், பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் கடந்த மாதம் 17 வயது சிறுமிக்கு இஸ்லாமிய மதத்தின்படி 29 வயது இளைஞருடன் அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கணவருடன் வாழ்ந்துவந்த சிறுமியை மீட்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்குள் தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டது உறுதியானது. இதன்பிறகு சிறுமியை மீட்டு கெல்லீசில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமண வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களை தொடர்ந்து சென்னையிலும் குழந்தை திருமணமா? என்று பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications