Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுக்கோட்டை கிணற்றில்.. "இப்பவே உள்ளே குதிக்க போறேன்".. தங்கை பின்னாலயே ஓடிய அண்ணன்! செல்போனுக்கா?

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செல்போனுக்காக அண்ணன் - தங்கை இருவரிடம் தகராறு வெடித்துள்ளது.. எந்நேரமும் செல்போனிலேயே தங்கை மூழ்கி கிடந்ததால், அவருக்கு அண்ணன் அட்வைஸ் செய்துள்ளார்.. கடைசியில் இப்படியொரு கொடுமை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்த தம்பதி சித்திரகுமார் - ஜீவிதா. இவர்களுக்கு மணிகண்டன் என்ற 18 வயது மகனும், பவித்ரா என்ற 16 வயது மகளும் உள்ளனர்..

Pudukkottai cellphone Well

மணிகண்டன் ஐடிஐ படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.. இந்த நிலையில் பவித்ரா நேற்று முன்தினம் இரவு செல்போனை தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தாராம்.. இதனால் அவரை பெற்றோர் கண்டித்திருக்கிறார்கள்.

அப்போது, மணிகண்டன், பவித்ராவின் செல்போனை கீழே போட்டு உடைத்துவிட்டதாக தெரிகிறது.. செல்போன் தன்னுடைய கண்ணெதிரே உடைந்துவிட்டதை பார்த்து பவித்ரா அதிர்ச்சி அடைந்தார்.. மேலும், இதில் மனமுடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டே, வீட்டுக்கு பக்கத்திலிருந்த கிணற்றில் குதித்துவிட்டார்..

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தன்னுடைய தங்கையை காப்பாற்றுவதற்காக அவரும் பின்னாடியே கிணற்றில் குதித்தார். ஆனால், அண்ணன், தங்கை இருவருமே தண்ணீரில் தத்தளிக்க துவங்கினார்கள்.. சிறிது நேரத்தில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, பவித்ரா, மணிகண்டன் இருவரையும் சடலமாகவே மீட்டனர்.. இந்த சம்பவம் குறித்து, மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, பிறகு, அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. செல்போனுக்காக, அண்ணன் தங்கையிடையே ஏற்பட்ட சண்டையில் இருவருமே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

செல்போனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர் மகளை கண்டித்ததுமே, மணிகண்டனும் தங்கையை கண்டித்திருக்கிறார்.. அப்போது மணி இரவு 11 ஆகிவிட்டது.. 11 மணிக்கு மேலும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த செல்போனை பறித்து, தூங்க செல்லுமாறு மணிகண்டன் அட்வைஸ் செய்துள்ளார்..
ஆனால், போனை திருப்பிக்கேட்டு அண்ணனிடம் சண்டை போட்டுள்ளார் பவித்ரா.

இந்த சண்டையில்தான், மணிகண்டன் செல்போனை தரையில் வீசி உடைத்துள்ளார். இதனால் மேலும் ஆவேசமடைந்த பவித்ரா, ஓடிச்சென்று கிணற்றில் குதித்துவிட்டார். ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் பறிகொடுத்துவிட்டு, பெற்றோர் கதறியது, காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+