புதுக்கோட்டையில் அண்ணின்னு யோசிக்கல, அண்ணன்னு நினைக்கல.. மகன் செய்த செயலால் திகைத்து போன பெற்றோர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சாலை விபத்தில் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்தனர்.. இதையடுத்துதான், இறந்து கிடந்த நபரின் சுயரூபம் தெரியவந்தது.. புதுக்கோட்டையை இந்த சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது. என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ளது புள்ளான்விடுதி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி வீரப்பன் - வசந்தா. இந்த தம்பதிக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த 2 மகன்களுக்குமே திருமணமாகிவிட்டது.

இதில் மூத்த மகன் முருகேசனின் மனைவி விமலா ராணி.. இளைய மகன் பாஸ்கரன் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்..
மூத்த மகன் பாஸ்கரன் மாலத்தீவில் கடந்த சில வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விமலா ராணிக்கும், பாஸ்கரனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் முருகேசனின் பெற்றோர்களுக்கு தெரிந்து, இருவரையுமே கண்டித்துள்ளனர்.. எனினும், பாஸ்கரனும் விமலராணியும் தங்களது தகாத உறவை வளர்த்து வந்துள்ளனர்.
கொலை திட்டம் அரங்கேற்றம்
இதனால் கவலை கொண்ட பெற்றோர், உடனே இதுகுறித்து முருகேசனிடம் தெரிவித்துள்ளனர்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன், தன்னுடைய மனைவி, மற்றும் தம்பி மீது ஆத்திரம் கொண்டார்.. அதிலும், தம்பியை கொலை செய்துவிடுவது என்ற முடிவுக்கும் வந்தார்.. இதற்காகவே, கடந்த 26ம் தேதி இரவு சொந்த ஊருக்கு வந்தார்.. ஆனால், வீட்டிற்குள் செல்லாமலேயே இந்த கொலை திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.. இந்த கொலைக்கு பெற்றோரும், உதவி செய்ய தயாரானார்கள்.
அதன்படி மறுநாள் அதாவது 27ம் தேதி விடிகாலையில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாஸ்கரனின் தலையில் கல்லை போட்டார்.. பிறகு கயிற்றால் அவரது கழுத்தையும் இறுக்கினார்.. இதில், தம்பியின் உயிர் துடிதுடித்து நின்றது.. பிறகு சடலத்தை மறைக்க முருகேசனின் பெற்றோரும் முன்வந்தனர்.
300 மீட்டர் தூரம்
விபத்தில் இறந்ததுபோல தெரிய வேண்டும் என்பதற்காக, பாஸ்கரனின் பைக்கிலேயே அவரது சடலத்தை வைத்து, 3 பேரும் கொண்டு சென்று, 300 மீட்டர் தூரத்தில் சாலையோரம் உடலை வீசிவிட்டு வந்துவிட்டனர்.. பொழுது விடிந்ததும், சாலையோரம் விபத்தில் இறந்து கிடந்த நபர் யாரென்று விசாரிக்க போலீசார் விரைந்து வந்தனர்.
பிறகு, சடலத்தின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக குடும்பத்தினருக்கும் தகவல் தந்திருக்கிறார்கள்.. இதைக்கேட்ட குடும்பத்தினரும் நிஜமாகவே அதிர்ச்சி அடைந்ததுபோல் அதை நம்பி கதறி அழுதுள்ளனர்..
இதற்கு பிறகு சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், பாஸ்கரனின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், உடம்பில் பல காயங்கள் கிடந்ததும், கழுத்து நரம்பு இறுக்கி கொல்லப்பட்டதும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் வந்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
முறையான விசாரணை
இதற்கு பிறகுதான், இதுதொடர்பான முறையான விசாரணையை வேகப்படுத்தினர்... முதல் விசாரணையை குடும்பத்தாரிடமே ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அண்ணி
என்றும் பாராமல், பாஸ்கரன் தகாத உறவில் இருந்ததும், குடும்பமே கண்டித்தும் இருவரும் திருந்தாததால், முருகேசன் கொலை வரை சென்றதும் விசாரணையில் அம்பலமானது.
இதில் ஹைலைட் என்னவென்றால், பாஸ்கரனை கொலை செய்ததில், முருகேசனின் மனைவிக்கும் தொடர்பு இருந்துள்ளது.. இதையடுத்து, முருகேசன், அவரது மனைவி விமலா ராணி, அம்மா வசந்தா, அப்பா வீரப்பன் ஆகிய 4 பேரையுமே போலீசார் கைது செய்து, தற்போது ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications