எலும்பெல்லாம் உடைந்து.. பிணமாக மீட்கப்பட்ட வங்கி ஊழியர்.. மாரிமுத்துவைக் கொன்றது யார்?
Recommended Video
புதுகோட்டை: பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன் மாயமானார். போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவரங்குளம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் மாரிமுத்துவின் கார் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதனிடையே வங்கியில் இருந்த 13.75 கிலோ தங்கநகைகளை மாரிமுத்து திருடிச் சென்றதாக தகவல் பரவியதால் பலர் ரசீதுகளுடன் வங்கியை முற்றுகையிட்டு தங்களது நகைகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.

சடலமாக மீட்பு
இதனால் வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மணமேல்குடி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

உறுதிப்படுத்தப்பட்டது
அந்த சடலம் மாரிமுத்துவுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி உட்பட குடும்பத்தார் அழைத்துவரப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது. இதில் மீட்கப்பட்டது மாரிமுத்துவின் சடலம் என உறுதிப்படுத்தப்பட்டது.

கொலையாக இருக்கலாம்
இந்நிலையில் மாரிமுத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரிமுத்துவின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் எலும்புகள் உடைந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புதிய திருப்பம்
ஏற்கனவே வங்கி ஊழியர்களே தமது கணவரை கொன்றிருக்கலாம் என மாரிமுத்துவின் மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications