புதுக்கோட்டையில் 5 மாத குழந்தையை பேரலில் மூழ்கடித்து தாய் கொலை! போலீஸில் பகீர் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 மாத குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கொன்றது ஏன் என்பது குறித்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கீரனூர் அருகே கண்ணங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவரது மனைவி லாவண்யா (20). இவர்களுக்கு ஆதிரன் என்ற பெயரில் 5 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

crime pudukottai

குழந்தைக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் லாவண்யா குழந்தையுடன் புலியூரில் உள்ள அவரது தாய் பொன்னருப்பு (42) வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவு லாவண்யாவின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதாக கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துபார்த்தனர்.

அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலுக்குள் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலின்பேரில் கீரனூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் லாவண்யா, மணிகண்டன், பொன்னருப்பு ஆகியோரிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் லாவண்யா மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து போலீஸாரிடம் லாவண்யா அளித்த வாக்குமூலத்தில், கணவர் என் மீது அன்பாக இல்லாமல் குழந்தை மீது மட்டும் பாசமாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் அழுத்தி கொலை செய்தேன். மேலும் 7 பவுன் தாலி சங்கிலியை மறைத்து வைத்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து லாவண்யாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 10 மாசம் சுமந்து பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+