ஆர்எஸ்எஸ், பாஜக அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... புதுக்கோட்டை இளைஞரை கைது செய்த உபி போலீஸ்
புதுக்கோட்டை: உத்தரபிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜ் முகமதுவை கைது செய்து போலீசார் விசாரணை பரபரப்பு.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர தொண்டரும் உதவி பேராசிரியருமாக இருப்பவர் நீல்காந்த் மணி பூஜாரி.
இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவரிடம் இருந்து ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்
அதில் லக்னோ, உன்னாவ் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் என மொத்தம் 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்திருந்தது. இதேபோல், உத்தரப்பிரதேச காவல்துறை உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் பாஜக அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை இளைஞர்
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் நீர்காந்தும் மதியாவ் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்ததை உறுதி செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையை தொடர்புகொண்டு உத்தரப்பிரதேச போலீஸ் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தவரின் முகவரியை உறுதி செய்தனர்.

புதுக்கோட்டை வந்த உபி போலீஸ்
இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோணத்தை சேர்ந்த ராஜ் முஹம்மது என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதன் பின்னர் லக்னோவிலிருந்து விமானத்தில் வந்த உத்தரப்பிரதேச போலீசார் அவரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக உத்தரப்பிரதேசம் அழைத்துச் செல்ல உள்ளனர்.

கர்நாடகா போலீஸ்
வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில் கர்நாடகாவின் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் அவர்களும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி இருக்கின்றனர். எனவே கர்நாடக போலீசாரும் கைதான ராஜ் முஹம்மதுவை காவலில் எடுத்து விசாரணைக்கு அழைத்து செல்ல அனுமதிகோரும் என்று கூறப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications