புதுக்கோட்டை அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதி விபத்து.. ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி
புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு வந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு வந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து தெலுங்கானா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 12 பேர் சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு தெலுங்கானா நோக்கி சென்றுள்ளனர்.
இன்று மதியம் இவர்களின் வேன் புதுக்கோட்டை அருகே வரும் போது விபத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த வேன் மிகவும் அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக சென்ற வேன் மோதியுள்ளது.
இதில் அந்த வேனில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். 3 பேர் மருத்துவமனையில் பலியாகிவிட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 5 பேர் திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த எல்லோரும் தெலுங்கானா அருகே இருக்கும் காசிபேட் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனம் கட்டுபாட்டை இழந்து காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications