திரு திருன்னு விழிக்கும் புதுக்கோட்டை.. காருக்கு ஏன் ஹெல்மெட் போடல? பொசுக்னு வந்த ரூ.4000 அபராதம்
புதுக்கோட்டை: காரில் ஹெல்மெட் போடாதது ஏன் என்று கேட்டு, ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்யும் சம்பவம் பெரும் சலசலப்பை சமீபகாலமாகவே கூட்டி வருகிறது.. அந்தவகையில், புதுக்கோட்டையிலும் ஒரு விநோதம் நேற்று நடந்துள்ளது, பெரும் பரபரப்பை கூட்டி வருகிறது.
ஹெல்மெட் அணியாததற்கு, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது நடைமுறையாக உள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு தென்காசியில், காரில் சென்றவருக்கு ஹெல்மட் ஏன் அணியவில்லை என்று கேட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் அருகே சுரேஷ் என்பவர் காரில் சென்றிருக்கிறார்.. அன்றைய தினமே, ஹெல்மெட் அணியவில்லை என சுரேஷின் செல்போனுக்கு இ-செலான்- லிருந்து அபராதம் குறித்து மெசேஜ் வந்திருக்கிறது.. அதாவது சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து, ஆட்டோமேடிக் முறையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட்: காரில் ஹெல்மெட் போடவில்லை என்று 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த சுரேஷ், போலீசில் புகாரும் தந்திருந்தார். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
இதுபோலவே, உத்தரப்பிரதேச மாநிலத்திலும், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. காரில் சென்ற துஷார் சக்ஸேனா என்ற பத்திரிகையாளர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி நொய்டா போலீசார் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்து மெசேஜ் அனுப்பியிருக்கிறார்குள்.. தவறுதலாக தனக்கு மெசேஜ் வந்துள்ளது என்று அந்த பத்திரிகையாளர் முதலில் நினைத்துள்ளார். ஆனாலும் அபராதம் செலுத்தக்கூறி அவருக்கு தொடர்ந்து மெசேஜ்கள் வரவும்தான் போலீசுக்கு சென்றுள்ளார்..
அதிர்ச்சி தகவல்: போலீசாரிடம் இதுகுறித்து அவர் கேட்டபோது, அபராதம் கட்டவில்லையென்றால் கோர்ட்டுக்கு செல்ல நேரிடும் என்றாராம்.. உடனே அந்த பத்திரிகையாளர், "காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா?" என்று கேட்டுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு ராஜஸ்தானின் இதேபோன்று ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது.. மாருதி ஆம்னி காரை ஓட்டிய நபருக்கு ஹெல்மெட் அணியாததற்காக போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.. இதனையடுத்து அந்த பத்திரிகையாளர், ஹெல்மெட் அணிந்து கார் ஓட்ட தொடங்கினாராம்.
டிரைவிங் லைசென்ஸ்: இப்போது புதுக்கோட்டையிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் என்ற 25 வயது இளைஞர், கடந்த, 2ம் தேதி ஆலங்குடிக்கு காரில் சென்றிருக்கிறார். அப்போது, மகேஷிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை, காரில் சென்ற போது ஹெல்மெட் அணியவில்லை, செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக கூறி மொத்தம் 4,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறி, செல்போனுக்கு மெசேஜ் தகவல் வந்துள்ளது.
காருக்கு ஹெல்மெட் போடாததால் அபராதம் அதிர்ச்சி அடைந்த மகேஷ், உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை போலீசாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.. ஆனால், இதுவரை முறையான பதில் இல்லையாம்.
வாகன சோதனை: இதுகுறித்து மகேஷ் சொல்லும்போது, "என்னுடைய காரை போக்குவரத்து துறை போலீசார் நிறுத்தி சோதனை செய்யவில்லை. வாகன சோதனையில் டிரைவிங் வைசன்ஸ் இல்லை, காரில் சென்ற போது, ஹெல்மெட் அணியவில்லை, மொபைல் போன் பேசியபடி கார் ஓட்டியதால் அபராதம் 4,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று இ-சலானிலிருந்து என்னுடைய போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்தது எனக்கு வினோதமாக உள்ளது" என்று நொந் சொல்கிறார்.
எனினும், இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால், சோதனையில் ஈடுபட்ட குறிப்பிட்ட காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு, இதுகுறித்த விவரத்தை சொன்னால், இந்த அபராதத்தை அதிகாரிகள் ரத்து செய்யக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications