ஆஹா ஆஹா வாட் ஏ காமெடி.. அமமுகவினரிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர்
Recommended Video

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் அங்கு வந்த அமமுகவினரிடம் வாக்கு கேட்டதால் கலகலப்பு ஏற்பட்டது.
திருச்சி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. எல்லா கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதுபோன்ற நேரங்களில் சில சமயங்களில் காமெடி, கலகலப்பு, சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

அரசியல் கட்சி
அதன்படி புதுக்கோட்டையில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்திவிட்டு வந்த இஸ்லாமியர்களிடம் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தொழுகை நடத்திவிட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மார்க்கெட் பகுதியில்
இதனைத் தொடர்ந்து தட்சணாமூர்த்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்க சென்றார் . அப்போது அங்கு அமமுகவினரும் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

வாக்கு கேட்டதால் கலகலப்பு
இதனையடுத்து 3 கட்சியைச் சேர்ந்தவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாக்கு சேகரித்து விட்டு வெளியில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வெளியில் வாக்கு சேகரித்த அமமுகவினரிடம் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் கலகலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications