தற்கொலை செய்த புதுக்கோட்டை பள்ளி மாணவன்.. தலை முடியை வெட்டச் சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை: தலைமுடியை வெட்டச்சொன்னதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் பள்ளி மாணவன். உறவினர்களின் போராட்டத்தை அடுத்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவனின் பெயர் மாதேஸ்வரன் என்பதாகும். இவர் புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணையா, மாரி கண்ணு தம்பதியினரின் மகனாவார். மாதேஸ்வரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

மாதேஸ்வரனுக்கு தலையில் நிறைய முடியும் தாடியும் இருந்தது. மாணவனை தலை முடி வெட்ட சொல்லி தொடர்ந்து ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் முடி வெட்ட ஆசிரியர்கள் வற்புறுத்தியதால் மாதேஸ்வரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாதேஸ்வரன் வழக்கம்போல் பள்ளிக்கு செல்லும் போது அவரது பெற்றோரிடம், "நான் தலைமுடி வெட்டவில்லை அதனால் என்னை ஆசிரியர்கள் திட்டுவார்கள் அவர்கள் உங்களிடம் பேசினால் பேசிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு தேர்வு எழுத சென்றுள்ளார்.
இந்நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமுடியையும் தாடியையும் வெட்டிவிட்டு பிற்பகல் ஒரு மணிக்கு தேர்வு எழுத வருமாறு கூறி மாணவனை பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் மாணவன் மாதேஸ்வரன் வீட்டிற்கு திரும்ப செல்லவில்லை. பள்ளிக்கு சென்ற மாதேஸ்வரன் வீடு திரும்பாமல் போகவே, மகனைக் காணவில்லை என குடும்பத்தினரும், உறவினர்களும் ஊர் முழுக்க தேடியுள்ளனர்.
அப்போது பள்ளியின் பின்புறம் உள்ள மரத்தில் மாதேஸ்வரன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவனின் உடலை கட்டி அனைத்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது மாணவரின் தற்கொலைக்கு அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் என்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை எடுக்க அனுமதிப்போம் என்று கூறி உறவினர்கள், மாணவனின் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாணவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications