என்னாச்சோ.. எப்படி இருக்காங்களோ.. நல்லாருக்காங்களா.. சென்னையில்.. தவிப்பில் வெளி மாவட்டக்காரர்கள்!
மாவட்டங்களில் செல்போன் டவர் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
Recommended Video

புதுக்கோட்டை: கஜா புரட்டி போட்டதில் புதுக்கோட்டையும் ஒன்று!
தமிழகம் முழுவதும் புயலின் தாக்கத்தால் மழை கொட்டி வருகிறது. வேதாரண்யம் பக்கம் புயல் கரையை கடந்தாலும் செல்லும் வழியெல்லாம் பாதிப்பை தராமல் செல்லவில்லை. எல்லோருமே கொட்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் சென்னைக்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை.
ஆனால் சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து படிக்கிறார்கள்.. வேலைக்கு போய் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் குடும்பத்தை விட்டு நீண்ட தூரம் வந்து தங்கி உள்ளனர்.

கவலையில் மக்கள்
தற்போது நிறைய மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது.. கரண்ட் கிடையாது. நேற்று இரவெல்லாம் மக்கள் குளிரிலும் மழையிலும் இருளிலும் தவித்தனர். 28 பேரை கஜா காவு வாங்கி சென்றதால், சென்னையிலுள்ள பிற மாவட்ட மக்கள் பயந்து நடுங்கி உள்ளனர். தங்கள் வீடுகளில் உள்ளவர்களை நினைத்து கவலைப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

செல்போன் டவர்
கரண்ட் வர 2, 3 நாள் ஆகும் என்று மாவட்ட நிர்வாகங்கள் சொல்லி விட்டதால், இன்னும் பீதி ஏறுகிறது இவர்களுக்கு. ஆனால் இதைவிட பெரிய சோகம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கரண்ட் மட்டும் என்றில்லை... தொலை தொடர்பும் சேர்ந்தேபோய்விட்டது.. மின்கம்பங்களுடன் செல்போன் டவரும் சாய்ந்தும், விழுந்தும் கிடக்கின்றன.

பயத்தில் உள்ளனர்
இதனால் வீட்டில் உள்ளவர்களை பிற இடங்களில் தங்கி இருப்பவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் யாருக்கு என்ன ஆச்சோ என்ற பதைபதைப்பிலேயே உள்ளனர். குடும்பத்தை விட்டு தூரமாக தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பிள்ளைகள் தங்கள் வீட்டை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் தங்கள் மாவட்டத்தை பற்றின மழை பாதிப்பு விவரங்களை ஆர்வத்துடனும், கலக்கத்துடனும் கவனித்து கொண்டே இருக்கிறார்கள்.

துடிக்கும் இதயங்கள்
ஃபேஸ்புக், ட்விட்டரில் வரும் செய்திகளை கண்டு ஒருசிலர் அதிர்ச்சி அடைகிறார்கள், ஒருசிலர் கலக்கமடைகிறார்கள். ஆனாலும் "எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை... நாங்கள் நல்லாதான் இருக்கிறோம்" என்ற வார்த்தைகளை கேட்க நிறைய உள்ளங்கள் வெளி மாவட்டங்களில் துடித்து கொண்டே இருக்கின்றன!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications