என்ன என்ன ஐட்டங்களோ! 10 மாட்டுவண்டி நிறைய, தாய்மாமன் சீர்னா இப்படி இருக்கனும்.. மிரண்ட புதுக்கோட்டை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காதணி விழாவிற்கு 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர் கொண்டு சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் வியந்து போய், இப்படியும் தாய்மாமன்களா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.
தாய் மாமன் சீர் என்பது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள பழக்கமாகும். தனது தங்கை அல்லது அக்காவின் மகன் மற்றும் மகளுக்கு காதணி விழா நடைபெற்றால், தாய்மாமன் மடியில் வைத்து தான் காது குத்தி மொட்டை அடிப்பார்கள். அப்போது தாய் மாமன் வீட்டு சீராக பாரம்பரிய பழக்கத்தின் படி தங்களால் முடிந்ததை வழங்குவார்கள்.

இதேபோல் தாய்மாமன் சீர் இன்னொரு முறையும் வழங்கப்படும். தனது அக்கா அல்லது தங்கை மகள் பூப்பெய்திவிட்டால், தாய் வீட்டு சீர்வரிசையாக தாய்மாமன்கள் பல பொருட்களை வழங்குவார்கள், இந்த இரண்டும் காலகாலமாக இருந்து வரும் தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சாரம்,.
புதுக்கோட்டை மாவட்டங்களில் தாய் மாமன் சீர் என்பது பெரிய அளவில் பேமஸ் ஆகும். மொய் விருந்து எப்படியோ, அப்படித்தான் தாய்மாமன் சீர் நிகழ்வும், மிக பிரம்மாண்டமாக நடைபெறும். அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் காதணி விழாவிற்கு 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர் கொண்டு சென்று அசத்தி உள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞராஜா, நவனீதா தம்பதிகளின் இரு குழந்தைகளுக்கும் காதணி விழா முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

இதை முன்னிட்டு குழந்தைகளின் தாய்மாமன்களான அனவயல் ஆண்டவராயபுரத்தைச் சேர்ந்த நவீன் சுந்தர் மற்றும் நவசீலன் ஆகியோர் பாராம்பரிய முறைப்படி 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் சீர்வரிசையுடன் அணி வகுத்து வந்தனர்.
அப்போது பெண்கள் பூக்கள், இனிப்புகள், பழங்களுடன் தாம்பளங்களை ஏந்தியபடியும், ஆண்கள் ஆடு, மிதிவண்டி, பைக் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை பிடித்தபடியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து சீர் செய்த நிகழ்வு , காண்போரை அந்த காலத்திற்கே அழைத்து சென்றது.

கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் லாரி நிறைய சீர் கொண்டு வந்து தாய்மாமன் ஒருவர் அசத்தி இருந்தார். தனது சகோதரி மகள் பூப்பெய்தி செய்தி கேட்டு, லாரி நிறைய உடைகள், அலங்கார உபகரணங்கள், பூக்கள், பழங்கள், மாலை, புத்தகங்கள் என 350 தட்டுகளுடன் வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அசத்தி இருந்தார். அந்த வகையில் 10 மாட்டு வண்டிய நிறைய சீருடன் இப்போதும் நடந்துள்ளது. புதுக்கோட்டையில் தாய்மாமன் சீர் நிகழ்வுகள் வெகுவிமரிசையாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே மாட்டு வண்டியில் சீர் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து தாய்மாமன்கள் கூறுகையில், எங்களுடைய அப்பா, அம்மாவின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது இந்த மாட்டு வண்டிதான். எனவே அதன் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல விரும்பினோம். தமிழர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி மாட்டு வண்டியில் சீர்கொண்டு வந்து காதணி விழாவை சிறப்பித்தோம் என்று கூறினார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications