பொன்னமராவதியில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்.. வன்முறையை தடுக்க போலீஸ் குவிப்பு
Recommended Video
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலைகளில் மரத்தை வெட்டி போட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த சிலநாட்களாக இரு பிரிவினர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் ஒரு பிரிவினர் குறித்து மற்றொரு பிரிவினர் வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்புவதாக புகார் எழுந்தது
இதனையடுத்து நேற்று இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமாதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் மூண்டது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது போலீஸார் மீதும், அவர்கள் வந்த வாகனங்கள் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.

இந்த கல்வீச்சில் 3 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் ஒரு போலீஸ் வாகனமும் சேதமடைந்தது. இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப்பில் ஒரு பிரிவினர் குறித்து தவறாக தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டத்தின் மீனாட்சிபுரம், கே.புதுப்பட்டி, புழுதிப்பட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மரங்களை வெட்டி சாலை நடுவே போட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications