பட்டா பெயர் மாற்றம்.. ஆன்லைனில் மாறினாலும் ஆப்லைனில் மாறாத காட்சி.. அசிங்கமாக சிக்கிய அரசு ஊழியர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிாிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். பட்டா பெயர் மாற்றம் ஆன்லைனில் மாறினாலும் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறைவதே இல்லை..
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திரம் பதிவு செய்த உடனே தானாகவே பட்டா பெயர் மாற்றம் செய்யும் நடைமுறை தமிழகத்தில் இருக்கிறது. அதேநேரம் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த பலர் பட்டா வாங்காமல் விட்டுவிட்டார்கள். அப்படி பட்டா வாங்காதவர்கள் சொத்தை விற்க வேண்டும் என்றால் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.. ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்து பதிவுத்துறை என்றால், அந்த சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று கூறி, பத்திரப்பதிவு செய்பவருக்கே பட்டா தருவது என்பது வருவாய் துறையின் வேலையாகும்.

வருவாய்துறையில் முதல் முக்கியமான ஊழியர் என்றால் அது விஏஓ. கிராம நிர்வாக அதிகாரியான அந்த விஏஓதான் நிலத்தின் வகையை ஆராய்ந்து பார்ப்பார். அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்பதை கண்டுபிடிப்பார். அந்த நிலம் அரசு நிலமா அல்லது புறம்போக்கு நிலமா, அரசு பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிலமா, அனாதீன நிலமா, ஆறு அல்லது குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலமா என்பதை பார்ப்பார். அதன்பிறகு அந்த நிலத்தின நில அளவையர் அளந்து அளவீடு செய்வார்.
இறுதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர்கள் அளிக்கும் பரிந்துரை தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லும். அதன்படி வருவாய்துறை பட்டா வழங்கும். இந்த நடைமுறை ஆன்லைனுக்கு மாறினாலும் மாறவில்லை.. ஏனெனில் சொத்து குறித்த வில்லங்க விவரங்கள் வருவாய்துறைக்கு மட்டுமே தெரியும் என்பதால் அந்த நடைமுறை இன்று வரை தொடர்கிறது.
அதேநேரம் சில அரசு ஊழியர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பது தொடர்கிறது. கடந்த சில மாதங்களில் ஏராளமான அரசு ஊழியர்கள் கைதாகி உள்ளனர். ஆனாலும் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.. அப்படித்தான் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கடவாக்கோட்டை பகுதி கிராம நிா்வாக அலுவலர் சதீஷ்குமார். இவரிடம் மீமிசல் அருகே பொய்யாதநல்லூர் பகுதியை சேர்ந்த ஜமால் முகமது என்பவர் தனது தங்கை சோபியா பானு வாங்கிய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு ஜமால் முகமது கோரிக்கை வைத்தார்.
அப்போது அவரிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜமால் முகமது, இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்க அறிவுறுத்தினார்கள்.
இந்த நிலையில் மீமிசலில் வைத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் ஜமால் முகமது ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிாிவு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பீட்டர் மற்றும் போலீசார் அதிரடியாக சென்று சதீஷ்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். பட்டா மாற்றம் செய்து கொடுக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அலுவலர் கைதான சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications