கோவிலுக்கு வெளியே வந்ததும்! அண்ணாமலையிடம் சீரியஸாக பேசிய அமித் ஷா! 4 நாளில் ரிசல்ட்! என்ன நடக்குது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நேற்று புதுக்கோட்டையில் தரிசனம் செய்த அமைச்சர் அமித் ஷா கோவிலை விட்டு வெளியே வந்ததும் திடீரென பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சீரியஸாக பேசியது கவனம் பெற்றது.

லோக்சபா தேர்தல் நாளையோடு முடிகிறது. நேற்றோடு பிரச்சாரம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ரிசல்ட் வரும் 4ம் தேதி வரை அரசியல் கட்சிகள் காத்திருக்க வேண்டும். ரிசல்ட்டுக்கு இடையே பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். அமைச்சர் அமித் ஷாவும் நேற்று தமிழ்நாடு வந்தார்.

lok sabha election 2024 annamalai 2024 amit shah annamalai

நேற்று லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். நேற்று தமிழ்நாடு வந்த மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கி உள்ளார். கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.

அதேபோல் இந்த முறை தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சாரம் முடிந்த பின்பும் கூட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி தியானம் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய உள்ளார்.

lok sabha election 2024 annamalai 2024 amit shah annamalai

48 மணி ஏசி அறையில் அவர் விடாமல் தியானம் செய்வார். தூங்க, குளிக்க மட்டும் பிரேக் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை பிரதமர் மோடி இளநீர் மற்றும் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.

அமித் ஷா தரிசனம்; இன்னொரு பக்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயில் ஆகியவற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். இப்படி ரிசல்ட்டுக்கு இடையே பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். அமைச்சர் அமித் ஷாவும் நேற்று தமிழ்நாடு வந்தார்.

lok sabha election 2024 annamalai 2024 amit shah annamalai

இந்த நிலையில்தான் புதுக்கோட்டையில் தரிசனம் செய்த அமைச்சர் அமித் ஷா கோவிலை விட்டு வெளியே வந்ததும் திடீரென பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சீரியஸாக பேசியது கவனம் பெற்றது.

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள், தேர்தல் நிலவரம் குறித்து அண்ணாமலையிடம் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை செய்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் நிலவரம் சரியாக இல்லை. மற்ற மாநிலங்களில் பாஜக வலுவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பலம் இல்லை.

இந்த முறை தமிழ்நாட்டில் பாஜக டாப் லீடர் பலர் போட்டியிட்டுள்ள நிலையில் இந்த முடிவுகள் தீவிரமாக கவனிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையிடம் அமித் ஷா தீவிரமாக பேசினார்.

அண்ணாமலை பேச்சு: சமீபத்தில் பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம். கீழே இருப்பவர்கள் மேலே போகலாம். அதைப் பற்றி எல்லாம் நாம் கவலை கொள்ளக்கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம்.

lok sabha election 2024 annamalai 2024 amit shah annamalai

பாஜக 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்; ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருங்கள். சென்னை; எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல, எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம்.

வெற்றியை கொண்டாட தயாராகுங்கள். இது காங்கிரசின் கோட்டை எனக்கூறுவது ஜீன் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் இருக்காது. ஜூன் 4க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது. தாமரை அடர்ந்து, படர்ந்து இருக்கும் காட்சியை ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் அனைவரும் பார்ப்பார்கள்., என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+