5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. புதுக்கோட்டையில் என்னாச்சு?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கிராமங்களில் நேற்று மாலை வானத்தில் கடும் சத்தம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. நேற்று மாலை அங்கு திடீரென வானத்தில் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம்
அதிக சத்தத்துடன் வெடி வெடிப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வெளியே வந்து பார்த்து உள்ளனர். ஏதாவது வெடித்துவிட்டதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சோதிக்க மக்கள் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் வானத்தில் அப்போது எதுவும் இல்லை. தொடர்ந்து சத்தம் மட்டும் கேட்டுள்ளது.

எப்படி?
இந்த நிலையில்தான் சில நொடியில் அங்கு விமானம் ஒன்று வந்துள்ளது. இதை அண்ணாந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மேலும் பல விமானங்கள் அங்கு அடுத்தடுத்து வந்துள்ளன. மொத்தம் 5 விமானங்கள் ஒரே நேரத்தில் வந்துள்ளன. அதுவும் இவை போர் விமானங்கள். இவை அங்கேயே வட்டமடித்து உள்ளன.

வட்டம்
இதை மக்கள் அண்ணாந்து பார்த்தபடி இருந்தனர். அப்போது அந்த விமானங்கள் மிகவும் தாழ்வாக பறந்துள்ளன. ஒரு முறை என்று இல்லாமல் இந்த விமானங்கள் 5 முறை அங்கு பெரிய வட்டம் போட்டுள்ளன. இது மிகப்பெரிய சத்தத்தை எழுப்பி உள்ளது. இந்த விமானங்கள் சோனிக் வேகத்தில் சென்றுள்ளன.

சோனிக்
சோனிக் வேகம் காரணமாக சோனிக் பூம் என்ற விளைவு ஏற்பட்டு வானத்தில் காற்று வெடிப்பது போன்ற சத்தம் கேட்கும். நேற்றும் இந்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் மக்கள் பதற்றத்துடன் வானத்தை பார்த்துள்ளனர். கடைசியில்தான் இது அருகில் உள்ள தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து வந்த போர் பயிற்சி விமானங்கள் என்று தெரிய வந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications