தன் பிஞ்சு குழந்தைகளின் முகம் கூட காணாமல் உயிரிழந்த புதுக்கோட்டை மருத்துவர் அஞ்சுதா.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் மகப்பேறு டாக்டர் பிரசவத்தில் திடீரென உயிரிழந்தார். பல தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவ நிபுணர், தான் பணிபுரிந்த புதுக்கோட்டை மருத்துவமனையில் பிரசவத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது 4-வது மகள் அஞ்சுதா (வயது 26). அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் மருத்துவ படிப்பையும் அரசு கல்லூரியிலேயே முடித்து மகப்பேறு டாக்டராக இருந்தார். இவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் மகப்பேறு டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த பல் டாக்டரான கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கர்ப்பமடைந்த அஞ்சுதா கடந்த 6 மாத காலமாக மகப்பேறு மருத்துவ விடுப்பில் தாய் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். கார்த்திக் மலேசியாவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மனைவியின் பிரசவத்திற்காக தற்போது மலேசியாவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு வந்துள்ளார்.

What happened to the obstetrician in Pudukkottai during delivery

இந்த நிலையில் மகப்பேறு டாக்டர் அஞ்சுதாவுக்கு கடந்த செவ்வாய்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலும் அதிகமானது. இதையடுத்து சிகிச்சைக்காக, அவர் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அஞ்சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

அஞ்சுதாவுக்கு அறுவை சிகிச்சையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. ஆனால் அஞ்சுதாவுக்கு கருப்பை குழாயில் ரத்தப்போக்கு அதிகரித்து முச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென இறந்து போனார். இதையடுத்து 2 குழந்தைகளும் திருச்சி தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன.

பிரசவத்தில் டாக்டர் அஞ்சுதா இறந்ததை கேட்டு அவரது தாய், தந்தை, கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. பல பெண்களுக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவ நிபுணர், தான் பணிபுரிந்த புதுக்கோட்டை மருத்துவமனையில் பிரசவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே மருத்துவர் அஞ்சுதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில், "தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்"

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு விரைந்திருக்க வேண்டியவர், கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார்.

மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே, கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம்.

மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+