ஆடு மேய்க்க போன முருகேசன் மனைவி.. நடுக்காட்டில் செருப்பும் தொப்பியும்.. கொலையாளி யார்?
ஆடு மேய்க்க சென்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை: ஆடு மேய்க்க போன முருகேசனின் மனைவியை யார் கொன்று போட்டார்கள் என்றே தெரியவில்லை.. நடுக்காட்டில் ஒரு ஜோடி செருப்பும், தொப்பியும் விழுந்து கிடக்கிறது.. அதனால் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அடுத்துள்ளது தேனிப்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி பானுமதி.. 45 வயதாகிறது.. ஆடு மேய்ப்பதுதான் இவர்களது தொழில்.

தென்னதிரையன்பட்டி ஆர்எஸ்பதி காட்டுப்பகுதியில்தான் வழக்கமாக ஆடு மேய்த்து வருவர்.. பானுமதிதான் ஆடுகளை அந்த பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.. அப்படித்தான் நேற்றும் ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார்.. ரொம்ப நேரமாகியும் பானுமதி வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை.. ஆனால் ஆடுகள் மட்டும் சரியாக வீடு வந்து சேர்ந்தன.
இதனால் பதறி போன முருகேசன் குடும்பத்தினரை அழைத்து கொண்டு காட்டுப் பகுதிக்கு ஓடினார்.. அங்குதான் பானுமதி பிணமாக கிடந்தார்.. அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர்.. ரத்த வெள்ளத்தில் பானுமதி விழுந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் கதறினர்.
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணையை கையில் எடுத்தனர். அப்போது, பானுமதி கொலை செய்யப்பட்ட இடத்தில், ஒரு ஜோடி செருப்பும், தொப்பியும் கிடந்ததை கண்டு அவற்றை கைப்பற்றினர்.. ஆடு மேய்க்க சென்ற பானுமதியை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.. சடலத்தை கைப்பற்றி, அந்த தொப்பி, செருப்பு யாருடையது என்பதையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications