இந்தா என் கடைசி முத்தம்.. ஏன் கூப்பிட்டும் வரலை.. காதலனுக்கு வீடியோ போட்டு.. தூக்கில் தொங்கிய காதலி

கள்ளக்காதலன் தன்னை சந்திக்க வராததால் பெண் வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிவிட்டார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: "இந்தா என் கடைசி முத்தம்.. நீ இல்லாமல் என்னால வாழ முடியாதுடா.. உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை.. ஏன் செல்போனை ஸ்விட்ச் ஆப் பண்ணே... ஏன் நான் கூப்பிட்டும் என்கிட்ட வரல.. " என்று சாகிற நேரத்திலும் கள்ளக்காதலனுக்கு வீடியோவில் முத்தம் தந்துவிட்டு, 32 வயது ராஜேஸ்வரி தூக்கு மாட்டி தொங்கியும் விட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கேவி கோட்டையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.. 32 வயதாகிறது.. இவரது கணவன் சுப்பிரமணியன்.. கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிறது.. 2 மகன்கள் உள்ளனர்.

ஆனால், கணவருடன் கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி பிரிந்து வந்துவிட்டார்.. காரைக்குடி பர்மா காலனி சொக்கலிங்க நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

கேவிகோட்டை

கேவிகோட்டை

அப்போதுதான் பிரபுதேவாவுடன் காதல் வந்துவிட்டது.. கேவி கோட்டையை சேர்ந்தவர் இந்த பிரபுதேவா... இந்த காதல் அளவுக்கு மீறி எல்லை மீறி வேற லெவலில் வளர்ந்துள்ளது. எந்நேரமும் போனிலும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். கல்யாணம் பண்ணினால் உன்னைதான் பண்ணுவேன் என்று பிரபுதேவா ராஜேஸ்வரியிடம் சொல்லி வந்துள்ளார்.

பிரபுதேவா

பிரபுதேவா

இந்நிலையில், ஒருகட்டத்தில் ராஜேஸ்வரியை சந்திப்பதை குறைத்து கொண்டாராம்.. சரியாக பேசுவதும் இல்லையாம்.. அதனால் தன்னை பார்க்க வருமாறு ராஜேஸ்வரி பிரபுதேவாவை வீட்டுக்கு பலமுறை அழைத்தாராம்.. ஆனால், பிரபுதேவா போகவே இல்லை. அதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி, தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டார்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

அதற்காக ஒரு வீடியோவில் இந்த காரணத்தை பேசி, அவருக்கு அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிட்டு, ரூமில் உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோவை பார்த்த பிரபுதேவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.. அதனால் ராஜேஸ்வரி வீட்டு ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. பிரபுதேவாவுக்கு மேல் ஷாக் ஆன ஹவுஸ் ஓனர், உடனடியாக ராஜேஸ்வரி வீட்டு கதவை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

தற்கொலை

தற்கொலை

இதையடுத்து, ராஜேஸ்வரியின் சகோதரர் கார்த்திக்ராஜா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்ததையடுத்து விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதலன் தன்னை பார்க்க வராதால், மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. முன்னதாக, அந்த வீடியோவில் ராஜேஸ்வரி கதறி அழுதுகொண்டே பேசுகிறார்.

கண்ணீர் வீடியோ

கண்ணீர் வீடியோ

"நீ இல்லாம என்னால இருக்க முடியாது.. எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை.. நான் இருப்பதால்தானே உனக்கு இவ்ளோ கஷ்டம்.. செல்போனையும் ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டே.. வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா.. நானே போறேன்.. இந்தா என் கடைசி முத்தம்" என்று அழுதுகொண்டே சொல்லி உள்ளார் ராஜேஸ்வரி.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது.. போலீசாரும் இந்த தற்கொலை சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+