ஓட்டு போடும் நேரத்தில்.. 3 வயது குழந்தையை நாசம் செய்த நபர்.. நெடுவாசலில் பரபரப்பு!
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
புதுக்கோட்டை: ஒரு பக்கம் ஊர்மக்கள் ஓட்டுப்போட்டு கொண்டிருந்த நேரம்.. 3 வயது குழந்தையை நாசம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆருகே உள்ளது நெடுவாசல் கிழக்கு கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் பாலமுருகன்.. 32 வயதாகிறது.
10 வருஷத்துக்கு மேல் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சில வருடத்துக்கு முன்புதான் ஊர் திரும்பினார். கல்யாணம் செய்து குழந்தை குட்டியுடன் வாழ்ந்து வருகிறார்.

பாலமுருகன்
இந்நிலையில், 30ம் தேதி நெடுவாசல் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது மாலை நேரம் என்பதால், ஓட்டு போடாதவர்களும் விரைந்து ஓட்டு போட சென்று கொண்டிருந்தனர்.

தீவிர சிகிச்சை
அந்த சமயத்தில் பாலமுருகன் தன் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார்.. ஊருக்குள் யாருமே இல்லை என்று நினைத்து பாலமுருகன் இவ்வாறு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அங்கிருந்தோர் இதை பார்த்து கதறி கூச்சலிட்டனர்.. சத்தம் கேட்டதும் பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போக்சோ
உடனே பெற்றோர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினர்.. அங்கு படுகாயமடைந்துள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.இது சம்பந்தமாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசில் குழந்தையின் பெற்றோர்கள் புகார் தந்ததையடுத்து, பாலமுருனை கைது செய்தனர்.

பரபரப்பு
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்த ஆலங்குடி மகளிர் போலீசார் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஊருக்குள் பொதுமக்கள் ஓட்டு போடும் சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, 3 வயது குழந்தையை இளைஞர் சீரழித்த சம்பவம் நெடுவாசலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications