Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது.. ஆபீஸ்ல அதிகமா வேலை பார்த்தா உயிரே போயிருமா.. 26 வயது இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

புனே: பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் படுக்கையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேலை செய்து வந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் அளிக்கப்பட்ட அதிகப்படியான பணிச் சுமையின் காரணமாகவே தங்களது மகள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையிலான வொர்க் ஃபிரம் ஹோம் என்ற நடைமுறையைக் கொண்டு வந்துவிட்டனர். வீட்டில் இருந்து கொண்டே வேலை என்றாலும் வேலை நேரத்திற்கும் மேலாக வேலை வாங்குகின்றனர் என்பதே பெரும்பாலான ஊழியர்களின் புலம்பலாக உள்ளது. இதனால், பல ஊளியர்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

pune work

இந்நிலையில், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவர் வேலை முடித்து வந்து தனது படுக்கையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன் (26). இவர் கடந்த மார்ச் மாதம் சார்ட்டெட் அக்கவுண்ட் படித்து முடித்துள்ளார். பின்னர், புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். அன்னா செபாஸ்டியனுக்கு கடுமையான பணிச்சுமை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்னா செபாஸ்டியன் கடந்த ஜூலை 20 ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு ஹாஸ்டலுக்கு திரும்பிய நிலையில் தனது கட்டிலிலேயே மயக்கம்போட்டு விழுந்து உயிரிழந்துள்ளார். அன்னா செபாஸ்டியன் உயிரிழந்து 2 மாதங்களான நிலையில், அவரது தாய் அந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, பன்னாட்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜீவ் மிமாமி என்பவருக்கு அன்னாவின் தாயார் அனிதா எழுதியுள்ள இமெயில் கடிதத்தில் கூறியுள்ளதாவது: அன்னாவின் முதல் வேலை இது. உங்களுடைய நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ஆனால், பணிக்குச் சேர்ந்த 4 மாதத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவு நேரத்தில் வெகு நேரமும், வார இறுதி நாட்களிலும் கூட பணியாற்றி உள்ளார். அவர் வேலை முடித்து வந்த பெரும்பாலான நாள்களில் மிகவும் சோர்ந்து போய்தான் வீட்டுக்குத் திரும்புவார். அன்னா புதிதாக வேலைக்குச் சேர்ந்த நிலையில் அவருடைய முதுகெலும்பு உடையும் அளவுக்கு பணிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அன்னா பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல் மாணவி. சி.ஏ. தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்தார். உங்களது நிறுவனம் அளித்த அனைத்துப் பணிகளையும் சோர்வு கொள்ளாமல் செய்தார். புதிய பணிச் சூழல், பணிச்சுமை, நீண்ட நேரம் பணியாற்றுவது என அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். இரவு நேரத்தில், விடுமுறை நாள்களில் கூட அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது.

கூடுதல் வேலையை கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி கேட்பார். நான் இது போன்ற வேலைகளை எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று சொல்வேன். ஆனால் அவரது மேலாளர் தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார். அன்னாவிற்கு ஓய்வெடுக்கக்கூட நேரம் இல்லை. இரவு, விடுமுறை நாளில் கூட வேலை செய்து கொண்டிருப்பார். ஒரு முறை அவரது கம்பெனி உரிமையாளர் இரவில் வேலையை கொடுத்துவிட்டு காலைக்குள் முடிக்கும்படி கூறினார்.

மூச்சுவிடக் கூட நேரமில்லை என்று அன்னா கூறினார். அவருடைய இறுதிச் சடங்குக்கு கூட யாரும் வரவில்லை. அவரது மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் பதில் வரவில்லை. எனது மகளின் உயிரிழப்பு அந்த நிறுவனத்தில் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் பட்ட துயரமும், அதிர்ச்சியும் வேறொரு குடும்பத்தால் தாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+