தற்கொலைக்கு முயன்ற காதலி... ஐசியுவில் தாலிகட்டி கல்யாணம் செய்த காதலன்.. தப்பி ஓட்டம்
புனே: சாதியை காரணம் காட்டி திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலனை கரம்பிடிக்க முடியாத ஏக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற காதலி சாவின் விளிம்புக்கு சென்றதால் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.
அதில் இருந்து மீண்ட அந்த பெண் மருத்துவமனையிலேயே காதலனை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அந்த காதலன் சில மணி நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சுராஜ் நலவடே என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஏழை பெண் மீனாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்துள்ளார். மீனாவும் அவரை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார்.

காதலி அதிர்ச்சி
இந்நிலையில் நலவடே தனது காதலி மீனாவிடம் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பி காதலனுடன் மகிழ்ச்சியாக இருந்த காதலிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காதலி வேதனை
அவரது காதலன் சுராஜ் நலவடே திடீரென மீனாவை தாழ்ந்த சாதி பெண் என்று கூறி திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா தன்னை திருமணம் செய்யுமாறு மன்றாடியிருக்கிறார். ஆனால் காதலன் அதற்கு முடியாது என மறுத்துவிட்டார்.

தீவிர சிகிச்சை
இதனால் வேதனை அடைந்த மீனா, திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதனால் சாவின் விளிம்புக்கு சென்றதால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

காதலன் தப்பி ஓட்டம்
இதையடுத்து மீனாவுக்கும் அவரது காதலன் சுராஜ் நலவடேவுக்கு மருத்துவமனையிலேயே நேற்று(டிசம்பர் 5ம் தேதி) திருமணம் நடந்தது. கட்டாயப்படுத்தி சுராஜை திருமணம் செய்து வைத்தார்கள். காதலி மீனாவுக்கு தாலி கட்டிய சுராஜ், அங்கிருந்து சிறிது நேரத்திலேயே தப்பி ஓடிவிட்டார்.

பலாத்கார வழக்கு
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீசில் காதலன் மீது புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் சுராஜ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் பலாத்கார வழக்கு பதிவு செய்து சுராஜை தேடிவருகிறார்கள். மருத்துவமனையில் காதலியை திருமணம் செய்த காதலன் அடுத்த சில மணி நேரத்தில் தப்பியோடிய சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications