3 மாதத்தில் 3 ஆண்கள்.. ஆளுக்கு 15 நாள்.. அதுக்கும் முன்னாடி முறைப்படி ஒருத்தர்.. அதிர வைத்த விஜயா!
3 மாதத்தில் 3 பேரை கல்யாணம் செய்த பெண் கைதானார்
புனே: 3 மாதத்தில் 3 ஆண்கள்.. ஒவ்வொருவரிடமும் நாட்கள் குடும்பம் நடத்தி உள்ளார் விஜயா என்ற பெண்.. இந்த 3 பேருக்கு முன்பே, ரியல் கணவர் ஒருவர் இருக்கிறார் என்பதுதான் ஷாக்!
மஹாராஷ்டிரா மாநிலம் அரங்காபாத் அருகே உள்ளது முகுந்தவாடி என்ற பகுதி... இங்கு வசித்து வரும் தம்பதி விஜயா - அம்ருத்... இவர்கள் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

லாக்டவுன் போட்டுவிடவும், இவர்களிடம் பணம் இல்லாமல் போய்விட்டது. அதனால், திடீரென விஜயா ஒரு ஐடியா செய்தார்.
கணவன் இருக்கும்போதே யோகேஷ் ஸ்ரீஷாத் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.. அவருடன் 15 நாட்கள் குடும்பம் நடத்தினர்.. பிறகு யோகேஷின் வீட்டிலிருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதனால் அதிர்ந்து போன யோகேஷ் மனைவியை காணாமல் பல இடங்களில் தேடி அலைந்தார்.. அப்போதுதான் விஜயாவுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ஒரு மகன் இருக்கிறான் என்பது தெரியவந்தது.. இதுகுறித்து அரங்காபாத் போலீசில் யோகேஷ் புகார் தந்தார்.. போலீசாரும் விஜயாவை விசாரித்தனர்.. அப்போதுதான், விஜயா ஏற்கனவே இன்னும் 2 பேரை கல்யாணம் செய்தது தெரியவந்தது.
யோகேஷூக்கு முன்னதாக, ராய்காட்டைச் சேர்ந்த சந்தீப் தாரதே என்பவர்தான் கல்யாணம் செய்துள்ளார்.. அடுத்ததாக, மேற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞரை கல்யாணம் செய்துள்ளார்.. எல்லாரிடமும் 15 நாட்கள் தங்கி உள்ளார் விஜயா. அவரிகளிடம் குடும்பமும் நடத்தி உள்ளார்.
இறுதியாக அவர்களிடம் இருந்த நகை, பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார். அவர்கள் 3 பேருமே விஜயாவை தனித்தனியாக தேடி வந்தனர்.. இதில், ஒருவர் மட்டும்தான் போலீசில் வந்து புகார் தந்தவர்.
கல்யாணத்துக்கு வரன் தேடும் ஆண்களையே விஜயா குறி வைத்திருக்கிறார்.. அதன்படியே அவர்களை சந்தித்து கல்யாணமும் செய்துள்ளார்.. 3 மாதத்தில் 3 ஆண்களை திருமணம் செய்து, ஒவ்வொரிடமும் 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்திருக்கிறார்.. இதற்கெல்லாம் விஜயாவின் ரியல் கணவன் உடந்தையாக இருந்துள்ளார். இப்போது இந்த ஜோடி கம்பி எண்ணி கொண்டிருக்கிறது!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications