புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவில் 3வது கட்ட டிரையல் ஆரம்பம்.. 1600 பேருக்கு ஊசி போட்டாச்சு

Google Oneindia Tamil News

புனே: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி 1600 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அதன் 3வது கட்ட பரிசோதனை குறித்து தகவல் தெரிவித்துள்ளார் எஸ்ஐஐ அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி ஆதார் பூனவல்லா.

புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவிஷீல்ட்' பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் 'கோவிஷீல்ட்' க்கான 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நாடு முழுவதும் 15 வெவ்வேறு மையங்களில் நடத்தி வருகிறது எஸ்ஐஐ நிறுவனம்.

இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்

தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள்

1,600 தன்னார்வலர்களின் சேர்க்கை அக்டோபர் 31 க்குள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது, அவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது. "இப்போது அவர்கள் அனைவரும் அடுத்த 28 நாட்களுக்கு கண்காணிப்பில் உள்ளனர்" என்று எஸ்ஐஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தடுப்பூசி

ரஷ்ய தடுப்பூசி

ஏற்கனவே ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசியை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் கொள்முதல் செய்துள்ள நிலையில், அதன் கிளினிக்கல் டிரையல் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சூப்பர்

இந்தியா சூப்பர்

ஐ.சி.எம்.ஆரின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா கூறுகையில், "தற்போது, ​​உலகளவில் தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது." என்றார்.

 உதவி செய்வோம்

உதவி செய்வோம்

மேலும் அவர் கூறுகையில், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் நல்ல வசதிகள் கொண்ட எஸ்ஐஐ, தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி வலிமையை தொடர்ந்து நிரூபித்துள்ளது. எங்கள் நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்குவதில் பெருமை கொள்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.

English summary
Adar Poonawalla, CEO of Pune-based SII told, "We are at the last mile. All of the 1,600 volunteers have been administered with required dozes of COVISHIELD vaccine."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X