போர்ஷே காரை மகன் ஓட்டியது அப்பாவுக்கு தெரியுமா தெரியாதா! போலீஸ்தான் நிரூபிக்கணுமாம்! அநியாய வாதம்
புனே: புனேவில் சொகுசு கார் விபத்தில் 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தனது மகனின் நடவடிக்கைகள் அத்தனையும் தந்தைக்கு தெரியும் என்பதற்கான ஆதாரத்தை போலீஸார்தான் நிரூபிக்க வேண்டும் என வழக்கறிஞர் அநியாயத்திற்கு தெரிவித்துள்ளார்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் குறுகிய சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போர்ஷ் ரக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது. சுமார் 250 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்தது. மது போதையில் சொகுசு காரை இயக்கிய போது அந்த கார் பைக்கின் மீது மோதியது.

இதில் அந்த பைக்கில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துவிட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அந்த காரை மடக்கினர். அப்போது அதில் 17 வயது சிறுவன் முழு போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொதுமக்கள் பிடித்து தாக்கி, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த சிறார்களுக்கான நீதிமன்றத்தில் அந்த சிறுவன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது. விபத்து ஏற்படுத்திய சில மணி நேரங்களில் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே அந்த சிறுவனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதை பலர் விமர்சித்துள்ளனர். சிறுவனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும். மனநல சிகிச்சை பெற வேண்டும். சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும்.
போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சலிங் பெற வேண்டும். எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. விபத்தை ஏற்படுத்திய சிறுவன் தொழிலதிபரின் மகன் என தெரியவந்தது.
இதையடுத்து 18 வயது நிரம்பாத நிலையில், லைசன்ஸ் எடுக்காமல் காரை தனது மகனிடம் ஓட்ட அனுமதித்ததாக அவருடைய தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார். தனது மகனுக்கு லைசன்ஸ் இல்லை என தெரிந்தும் விஷால் அகர்வால் காரை கொடுத்து இருவரின் உயிருக்கு உலைவைத்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது. மேலும் தனது மகன் போதைக்கு அடிமை என்பதை அறிந்தும் விஷால், அவரை பார்ட்டிக்கு அனுப்பி வைத்ததாகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: எஃப்ஐஆரில் சிறுவனின் தந்தை மீது குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு அவரை கைது செய்தது சந்தேகத்தை எழுப்புகிறது. மகன் காரை எடுத்து ஓட்டியது, குடித்தது விஷால் அகர்வாலுக்கு தெரியுமா தெரியாதா என்பதை போலீஸார்தான் நிரூபிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு மகன் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதற்கு அவருடைய தந்தைதான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என எப்படி கூறமுடியும் என்று பாட்டீல் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஒருவர் அதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அது போல் தனது மகன் காரை எடுத்தாரா இல்லையா என்பது தந்தைக்கு தெரியுமா இல்லையா என்பதை போலீஸார்தான் நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
18 வயது நிரம்பாத குழந்தைகள், 18 வயது நிரம்பினாலும் லைசன்ஸ் எடுக்காதவர்கள் இரு சக்கர வாகனங்களை கூட இயக்கக் கூடாது என சட்டம் சொல்கிறது. அப்படியிருக்கையில் 18 வயதுக்குள்பட்ட மகனோ மகளோ வாகனத்தை இயக்குகிறார் என்பது கண்டிப்பாக பெற்றோருக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் போது இதை போலீஸார் நிரூபிக்க வேண்டும் என வக்கீல் வாதம் செய்வது ஏற்புடையதாக இல்லை என்றே விவாதங்கள் எழுகின்றன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications