புனே கார் விபத்து.. சிறுவனை காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்.. திடீரென பறந்த போன் கால்கள்! பரபர
புனே: புனே போர்ஷே கார் விபத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக இப்போது சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு நடந்த விபத்து அனைவருக்கும் பகீர் கிளப்புவதாக இருந்தது. குடிபோதையில் காரை இயக்கிய பிரபல தொழிலதிபரின் மகன், பைக்கில் வந்த தம்பதி மீது மோதியுள்ளான்.

இதில் அந்த சிறுவன் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். இந்த கார் விபத்தில் சிறுவனைக் காப்பாற்ற சினிமாவை மிஞ்சும் வகையில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.
பரபர குற்றச்சாட்டு: இதற்கிடையே இந்த விபத்தில் சிறுவனைக் காப்பாற்ற அரசியல் தலையீடுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது போர்ஷே விபத்தில் சிறுவனைக் காப்பாற்ற ரத்த மாதிரிகளை மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்களில் ஒருவர் மகாராஷ்டிர அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஒருவரின் வற்புறுத்தலின் பேரிலேயே தடயவியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டதாகச் சம்பந்தப்பட்ட அந்த புனே சசூன் மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிர எம்எல்ஏ சுனில் டிங்ரே, புனே கார் விபத்துக்குப் பிறகு எர்வாடா காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும் வழக்கில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என்று அவர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
அரசியல் தலைவர்கள்: இது தொடர்பாக இளைஞனின் ரத்த மாதிரியை மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்படும் புனேவின் சசூன் மருத்துவமனையின் டீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் மற்றும் டிங்ரே ஆகியோர் டாக்டர் அஜய் தவாடேவை சாசூன் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையின் தலைவராக நியமிக்குமாறு கடிதம் எழுதியிருந்தனர். இதன் காரணமாகவே அவரை தலைவராக நியமித்தோம்" என்று கூறியிருந்தார்.
முஷ்ரிப் மற்றும் எம்எல்ஏ டிங்ரே ஆகிய இருவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் பிரிவைச் சேர்ந்தவர்களாகும். டீன் காலேவின் இந்தப் பேச்சு மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து டீனாக சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறி காலேவை கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இது மேலும் விவாத புள்ளியாக மாறியுள்ளது.
லஞ்சம்: தவாடே மற்றும் சாசூன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்ரீஹரி ஹார்னர் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.. கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியைக் குப்பையில் வீசிவிட்டு அதை ஆல்கஹால் இல்லாத ரத்த மாதிரியை வைத்து இவர்கள் மாற்றியுள்ளனர். இதற்காக இரண்டு மருத்துவர்களுக்கும் ₹ 3 லட்சம் லஞ்சமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு மருத்துவர்கள் மற்றும் பியூன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் பரபர: இந்தச் சூழலில் விபத்து தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி சில பகீர் குற்றச்சாட்டுகை முன்வைத்துள்ளது. இந்த விபத்தில் ஆளும் தரப்பு எம்எல்ஏ ஒருவரின் மகனுக்குத் தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாகவே அரசியல்வாதிகளை விபத்தை மூடிமறைக்கத் துடிப்பதாகவும் காங்கிரஸின் மகாராஷ்டிரத் தலைவர் நானா படோலே குற்றஞ்சாட்டியுள்ளார்.
புனேவில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனைக் காப்பாற்ற அவனது தந்தை தொழிலதிபர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். விபத்து நடந்த உடன் அந்த தொழிலதிபர் டாக்டர் தவாடேவை குறைந்தது 14 முறை தொடர்பு கொண்டார்.. வாட்ஸ்அப், வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் ரத்த மாதிரியை மாற்ற அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications