"மைனருடன் தேனிலவு".. கிளாஸ் பையனுடன் காதல்.. மாணவனையே திருமணம் செய்த ஆசிரியை.. கடைசியில் ட்விஸ்ட்
ஜலந்தர்: பஞ்சாபில் 13 வயது சிறுவனை அவனது பெற்றோருக்கு தெரியாமல் ஆசிரியை ஒருவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தற்போது அந்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளும், குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் பெண்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.

ஆசிரியை - மாணவன் காதல் சம்பவம்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக மட்டுமல்ல, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் இந்தியாவில் ஆங்காங்கே நடைபெறுவது அதிகரித்துள்ளது. சமீபத்தில் கூட அம்பத்தூரில் 23 வயது ஆசிரியை சர்மிளாவுக்கும் - 17 வயது ப்ளஸ் டூ மாணவனுக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்த சூழலில், சர்மிளாவுக்கு வீட்டில் வரன் பார்க்க தொடங்கினார். இதனால் மாணவனுடனான உறவை சர்மிளா தவிர்த்து வந்தார். இதனால் மனமுடைந்த மாணவன் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக ஆசிரியை சர்மிளாவை போக்சோ வழக்கின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

பஞ்சாப் ஆசிரியை
இந்நிலையில், பஞ்சாபிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபின் ஜலந்தரில் பஸ்தி பாவா கேல் பகுதியைச் சேர்ந்தவர் மங்லிக் (24). தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக இவர் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, இவருக்கு திருமண தோஷம் இருந்ததாக அண்மையில் ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், திருமணமாக ஆணை திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவரை பிரிந்து விதவைக்கோலம் பூண்டால் அவருக்கு திருமணம் ஆகும் என கூறியிருக்கிறார் அந்த ஜோதிடர்.

மாணவனை வீட்டில் தங்க வைத்த ஆசிரியை
இதனை நம்பிய மங்லிக்கும், ஜோதிடர் சொல்வது போல செய்து தனது திருமண தோஷத்தை கழிக்க முடிவு செய்தார். ஆனால் எப்படி திருமணம் ஆகாத ஆண்களை திருமணம் செய்து, பின்னர் அவர்களை உடனடியாக பிரிய முடியும்? யார் இதற்கு ஒத்துக்கொள்வார்கள்? இதனால் தன்னிடம் படிக்கும் ஒரு மாணவனை திருமணம் செய்ய முடிவு செய்த மங்லிக், 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனை தேர்ந்தெடுத்தார். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட அந்த மாணவனை, தானே தனது வீட்டில் தங்க வைத்து பணம் கட்டி படிக்க வைப்பதாக அவனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை மாணவனின் பெற்றோரும் நம்பினர்.

திருமணமும் - கைது நடவடிக்கையும்
இந்நிலையில், கடந்த வாரம் சிறுவனை வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக தனக்கு தாலி கட்ட சொல்லி ஆசிரியை மங்கிக் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தேனிலவுக்கும் சென்றுள்ளனர் என்பதுதான் கூடுதல் ஹைலைட். பிறகு தோஷத்தை போக்க திருமணமாகி 6 நாட்களுக்குப் பிறகு, ஆசிரியை மங்லிக் விதவைக்கோலம் பூண்டார்.கணவர் இறந்துவிட்டார் என உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு, அதற்கான சடங்குகளும் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அந்த ஆசிரியை, மாணவனை வீட்டுக்கு அனுப்பினார். சிறுவன் வீட்டிற்கு வந்து நடந்த அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களிடம் கூற, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications