தீபாவளி வாழ்த்து என்ற பெயரில்.. தமிழ்நாடு அரசை குத்திக்காட்டிய ராமதாஸ்! மனிதன் சமூக விலங்காமே
சென்னை: சமூகத் தீமைகள் விலகி, நன்மை ஒளி பரவ தீபஒளி திருநாள் வகை செய்யட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தற்போதே தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை வரவேற்கத் தொடங்கி உள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பலர் தீபாவளி வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸும் தீபாவளி வாழ்த்தை பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும்.
அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீப ஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி. தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால் தான் மக்கள் மனமும் செழிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடின்றி தாராளமாக நடைபெற்று வந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தோல்வியடைந்து விட்டது. அதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாட வேண்டிய உழவர்களின் மனங்கள், வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் துவண்டு கிடக்கின்றன.
இந்தியாவின் பல மாநிலங்களில் சமூக நீதி செயல்பாடுகள் நாலு கால் பாய்ச்சலில் வேகம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் சறுக்கிக் கொண்ட சமூகநீதியை சரி செய்வதற்கு கூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியடையும் வகையில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை.
மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications