Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

103 ஆடுகள்.. 2000 கிலோ ஆட்டிறைச்சி.. கமுதியின் மூக்கை துளைத்த கமகம மட்டன் குழம்பு.. வாவ் ராமநாதபுரம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த கறிவிருந்து வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?

தென் மாவட்டங்கள் என்றாலே எப்போதுமே திருவிழாக்கள் களைகட்டிவிடும்.. வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் இதுபோன்ற திருவிழாக்களில் கறிவிருந்தும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுவது சிறப்பாகும்.

103 goat for Ramnad Munishvarar Temple Festival and what happened in Kamuthi Ramanathapuram Temple

அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். இந்த மாவட்டத்திலுள்ள கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 2வது வாரத்தில் எல்லை பிடரி அம்மன் கன்னிபெண் குலதெய்வத்தை ஆண்கள் மட்டுமே கூடி வழிபாடு செய்வது வழக்கம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இன்னொரு நிகழ்வும் நேற்றைய தினம் நடந்துள்ளது.

முனீஸ்வரர்: கமுதியில் உள்ளது பெருமாள் தேவன் பட்டி என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.. இதற்கு காரணம், இக்கோவிலில் உள்ள தர்ம முனீஸ்வரர் சுயம்பாக உருவாகி உள்ளதாக சொல்வார்கள். எனவே, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வழிபடும் புகழ்பெற்ற கோயில் இதுவாகும்.

காணிக்கைகள்: அதுமட்டுமல்ல, இந்த கோயிலில் பக்தர்கள் எது வேண்டிக்கொண்டாலும், அது அப்படியே நடப்பதாக நம்பப்பட்டு வருகிறது. திருமணத்தடை நீங்குதல், குழந்தை வரம் வேண்டுதல், செய்வினை கோளாறுகளை நிவர்த்தி செய்ய, தீய சக்திவரிடமிருந்து பாதுகாக்க, கல்வி செல்வம், தொழில் முன்னேற்றம் அடைதல் ஆகியவற்றுக்கு சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது.

அப்படி தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால், இந்த கோயிலுக்கு வந்து ஆடுகளை காணிக்கையாக தந்து பலியிட்டு விருந்து தருவார்கள். அதாவது இரட்டை கிடாய் வெட்டி நேர்த்திக்கடனைப் பக்தர்கள் செலுத்துகிறார்களாம். அந்தவகையில் எப்போதுமே ஒவ்வொரு வருடமும் வைகாசி திருவிழா இங்கு நடைபெறுவது வழக்கமாகும்.

அன்னதானம்: நேற்றைய தினமும் இந்த வருடத்துக்கான திருவிழா நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினமே கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வர ஆரம்பித்தனர்.. தங்களது வேண்டுதல்கள் நிறையவேறியதற்காக, மொத்தம் 103 ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டன. பின்னர் 2000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது.. அவை 11 அண்டாக்களில் தயாரானது.

ஆட்டிறைச்சி முடிந்ததும், 1500 கிலோ அரிசி சமைக்கப்பட்டது.. பிறகு சிறப்பு பூஜை முடிந்தபிறகு, அசைவ விருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிமாறப்பட்டது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+