நடுக்கடல் கச்சத்தீவில் திருவிழா- தமிழகத்தில் இருந்து 3,000 பக்தர்கள் படகுகளில் புறப்பட்டனர்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 3,000 தமிழக பக்தர்கள் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து படகுகளில் புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Recommended Video
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இதனை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது. இருப்பினும் ஆண்டுதோறும் கச்சத்தீவில் உள அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழகம், ஈழ தமிழர்கள் பங்கேற்று வந்தனர்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் யுத்தம் ஏற்பட்ட போது பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்கவில்லை. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு 3,000 பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டனர். கச்சத்தீவில் இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். அங்கேயே தங்கும் தமிழக பக்தர்கள் நாளை திருவிழா முடிவடைந்ததும் தமிழகம் திரும்புவர்.
முந்தைய காலங்களில் கச்சத்தீவு திருவிழா என்பது தமிழகம், ஈழத் தமிழர்களிடையே மண உறவுக்கான நிகழ்ச்சியாக இருந்தது. பண்டமாற்று முறையில் பொருட்கள் விற்பனை செய்யும் முறையும் நடைமுறையில் இருந்தது. தற்போது அடையாளத்துக்கான ஒரு திருவிழாவாக மட்டும் சுருங்கி நிற்கிறது.
ஈழத் தமிழர்கள் சுமார் 10,000 பேர் அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை செய்துள்ளது.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications