வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமி.. ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த 16 வயது சிறுமியை ஆறுதல் சொல்லி ஆதரவு தருவது போல் நடித்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த வாரம், வீட்டில் சண்டை போட்டு, கோபித்துக் கொண்டு பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்றுள்ளார். அப்போது பரமக்குடியைச் சேர்ந்த நீலாவதி (45) என்பவர் சிறுமிக்கு ஆதரவு கொடுப்பது போல் ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.

3 arrested for pushing girl into sex work in ramanathapuram

ஆட்டோ டிரைவர் பாண்டி உதவியுடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், அவரை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.

இது குறித்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியவரவே, நீலாவதியின் வீட்டிற்குச் சென்று சண்டை போட்டனர். தகவலறிந்த, பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், நீலாவதியை அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்தது உறுதியானது.

நீலாவதி மற்றும் உடந்தையாக இருந்த சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த மஞ்சுளா (எ) பஞ்சவர்ணம், ஆட்டோ டிரைவர் பாண்டி, ஆகிய 3 பேரையும் சிறுமியை கடத்தியது, பாலியலுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+