700 வருடம் பழமையான பாம்பன் பள்ளிவாசல்.. புதுப்பிப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!
ராமநாதபுரம்: பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழமையான ஜாமி ஆ மஸ்ஜித் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அந்தப் பள்ளிவாசல் மீண்டும் நேற்றைய தினம் (ஏப்ரல் 20) திறக்கப்பட்டது. அங்கு நேற்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தை அடுத்துள்ள ஊர் தான் பாம்பன். இது தீவின் மேற்கு விளிம்பில் உள்ளது. இங்கு மீன்பிடித் தொழிலே பிரதானத் தொழிலாக இருக்கிறது. இந்த பாம்பன் பகுதியில் தான் சமீபத்தில் புதிய பாம்பன் தூக்கு மேம்பாலம் திறக்கப்பட்டது.

பாம்பன் பள்ளிவாசல்
பழமையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பாம்பன் பகுதியில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளன. இதற்கிடையே அங்குச் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பாம்பன் பள்ளிவாசல் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
700 ஆண்டுகள் பழமையானது
ஜாமி ஆ மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 700 ஆண்டுகளுக்கு முன்பு 1311ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் இங்கு தான் தொழுகை செய்து வந்தனர். இந்தப் பள்ளிவாசல் ஏற்கனவே கடந்த 1992ம் ஆண்டு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தொழுகை நடத்தும் அறையில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிவாசல்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல் நேற்று ஏப்ரல் 21ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.
கட்டியது யார்
மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பாம்பன் பள்ளிவாசல், அதாவது ஜாமி ஆ மஸ்ஜித்தை கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர். இந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த இடம் தேவை என்பதால் இவர் இந்தப் பள்ளிவாசலை கட்டியிருக்கிறார். அப்போது முதலே இங்கு தான் மக்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர்.
இடையில் கடந்த 1992ம் ஆண்டு இந்தப் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது. இதற்கிடையே சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பள்ளிவாசல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளே தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications