"காமவெறி".. ஒரு பெண்ணையும் இந்த தாத்தா விடமாட்டாராம்.. 85 வயசுல செய்த அக்கிரமம்..கடைசியில் ஒரு கொலை

மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: 85 வயதாகியும் தாத்தாவின் சேட்டை அடங்கவில்லை.. எந்த பெண்ணையும் விட்டு வைக்காமல் ஆட்டம் போட்டு, கடைசியில் ஒரு கொலை வரை வந்து முடிந்துள்ளது விவகாரம்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மடையை சேர்ந்தவர் சந்திரசேகர்... மனைவி பெயர் ஞானசவுந்தரி.. 80 வயதாகிறது..

சந்திரசேகர் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.. 85 வயதாகிறது.. இவர்களது பிள்ளைகள் எல்லாம் வெளியூரில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

தம்பதி

தம்பதி

தம்பதி மட்டும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.. இந்நிலையில், சம்பவத்தன்று சாப்பாடு வாங்க, ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதிக்கு சென்றுவிட்டு சந்திரசேகர் வீடு திரும்பினார்.. அப்போது ஞானசவுந்தரி பிணமாக விழுந்து கிடப்பதை பார்த்து கதறினார்.. அவரை யாரோ அடித்து போட்டுவிட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசுக்கு தகவல் தந்தார் சந்திரசேகர்.. அதன்பேரில் போலீசாரும் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர்..

 காயங்கள்

காயங்கள்

ஞானசவுந்தரியின் சடலத்தை பார்த்தபோது, அவரது தலையின் பின்பக்கம் காயங்கள் இருப்பது தெரிந்தது.. உடம்பெல்லாம் ரத்தம் வழிந்தபடியே இருந்தது.. யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.. இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணை ஆரம்பமானது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு நோட்டமிடப்பட்டது.. தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்... ஞானசவுந்தரியின் உடலும் போஸ்ட்மார்ட்டத்துக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது...

 கணவன்

கணவன்

முதல் விசாரணையே கணவர் சந்திரசேகரிடம் ஆரம்பமானது.. போலீசார் கேள்வி கேட்கும்போதே உளற ஆரம்பித்தார் சந்திரசேகர்.. முன்னுக்கு பின் முரணாக தகவல் சொன்னார்.. அதற்கு பிறகு, அவரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போது ஒரு ஓட்டல் நபரின் பெயரை சந்திரசேகர் சொன்னார். அவர் கொடுத்த தகவலின்படி, ஓட்டலில் வேலைசெய்து வந்த அந்த நபரை போலீசார் தேடிச் சென்றனர்...

 அடித்து கொலை

அடித்து கொலை

ஆனால் அந்த நபர் ஊருக்கு போய்விட்டாராம். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.. இதையடுத்து அவரை தேடிப்பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.. அதேசமயம், மீண்டும் சந்திரசேகரிடம் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டார்.அந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், கணவரே மனைவியை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது..

 பெண்களுக்கு வலை

பெண்களுக்கு வலை

அப்போது சந்திரேசகர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே மிரண்டு போய்விட்டனர்.. சந்திரசேகருக்கு ஓய்வூதிய பணம் வருகிறது.. இந்த பணத்தை வைத்து கொண்டு பெண்களுக்கு வலைவீசுவாராம் இந்த 85 வயசு தாத்தா சந்திரசேகர்.. அதிலும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களைதான் குறிவைப்பாராம்.. அவர்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களை மெல்ல தன் வசப்படுத்தி, தவறான உறவு வைத்து கொள்வாராம்.

 ஜெயில்

ஜெயில்

இப்படி பல பெண்களுக்கு பணத்தை தண்ணீராய் செலவு செய்து வந்ததை அவரது மனைவி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்... இதுதான் தாத்தாவுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. மனைவியை கொலை செய்யவும் திட்டம் தீட்டினார்.. வீட்டிலிருந்த அரிவாளிலேயே, மனைவியின் பின்னந்ததலையில் ஓங்கி வெட்டி உள்ளார்.. இதில் சுருண்டு மனைவி ரத்தவெள்ளத்தில் சரிந்துள்ளார்.. அப்போதும் அவரது கழுத்தை நெரித்தாராம்.. அதற்கு பிறகுதான், மனைவியின் உயிர் போயுள்ளது.. இவ்வளவையும் தாத்தாவே போலீசில் வாக்குமூலமாக சொன்னார். இப்போது தாத்தா ஜெயிலில் இருக்கிறார்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+