தமிழர்கள் என்றாலே மத்திய அரசுக்கு ஏன் கசக்கிறது? கச்சத்தீவை மீட்கணும்! ஸ்டாலின்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பேராவூர் அருகே ரூ 134 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 50,752 பயணிகளுக்கு ரூ 42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய அரகசுக்கு ஏன் கசக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சாலை மார்க்கமாக மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு சென்றார். அங்கு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் 1.55 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து ராமநாதபுரத்திற்கு முதல்வர் புறப்பட்டுச் சென்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து இன்று காலை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பேராவூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ரூ 134 கோடி மதிப்பில் 150 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அது போல் ரூ 176 கோடியில் 109 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 50,752 பயனாளிகளுக்கு ரூ 42.68 கோடி மதிப்பிலான உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் இந்த விழாவில் அவர் பேசுகையில் ராமநாதபுரம் தண்ணீரில்லாத பகுதி என்ற நிலை மாற்றப்படும். விரிவுப்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தால் ராமநாதபுரம் பகுதியில் 3.82 லட்சம் பேர் பயனடைவார்கள். இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது ராமநாதபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு பொறியியல் கல்லூரியை முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ரூ 616 கோடியில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ராமநாதபுரம் தனுஷ்கோடி மேம்பாட்டு திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வந்தது. ராமநாதபுரம் அனைத்து மதத்தினரும் சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மண்ணாக திகழ்கிறது.
ராமநாதபுரம் பகுதியில் 6 வழித்தடம் ரூ 30 கோடியில் மேம்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் 2.36 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் 4 வழிச்சாலை, ரூ 30 கோடி 4 வழித்தடமாக மாற்றப்படும். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சேதுபதி நகர் என பெயர் சூட்டியவர் கருணாநிதி. ராமநாதபுரத்தில் 4 ஆண்டுகளில் ரூ 3000 கோடியில் 46,770 திட்ட பணிகள் நடந்துள்ளன. இலங்கை படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசுக்கு தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஏன் கசக்கிறது. தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications