ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடியா.. தமிழகத்திலா.. போட்டியிடட்டும்.. பதிலடி கொடுக்க மக்கள் தயார்.. துரை வைகோ

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் தமிழ்நாடு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனமதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் " மாமனிதன் வைகோ" ஆவண படத்தை மதிமுக தலைமை நிலையச் செயலாளா் துரை வைகோ ராமநாதபுரத்தில் வெளியிடுகிறார். இதற்காக மதுரையிலிருந்து காரில் ராமநாதபுரம் சென்றார்.

பரமக்குடியில் தொண்டர்கள், நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் துரைவைகோ பேசுகையில், இந்திய ஒரு ஜனநாயக நாடு, இதில் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

பெங்களூர் ஐடி புரட்சியின் கர்த்தா..கர்நாடகா மாஜி முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசியலில் இருந்து ஓய்வு! பெங்களூர் ஐடி புரட்சியின் கர்த்தா..கர்நாடகா மாஜி முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசியலில் இருந்து ஓய்வு!

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அதிமுக தான் பாஜகவின் அடிமை கட்சியாக உள்ளது, பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறிய பின்பு, இதர கட்சிகளின் கூட்டணிகள் குறித்த கருத்துக்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவிக்க வேண்டும்.

அண்ணாமலை விளக்க வேண்டும்

அண்ணாமலை விளக்க வேண்டும்

பாஜகவின் மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம் அக்கட்சியின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் போது அந்த கட்சியில் என்ன நடக்கும் என்பது பொதுமக்களுக்கு தெரியும். பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறும் மிகப்பெரிய இயக்கம் பாஜக. அந்த கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல்

வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் தமிழகத்தில் போட்டியிட போவதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து தருமபுரி எம்பி செந்தில் குமாரிடம் கேட்ட போது, பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவுக்கு வழங்குவோம்.

தருமபுரி

தருமபுரி

மாநில தலைவர் அண்ணாமலையே தருமபுரியில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார். மேலும் நான் தேர்தலின் போது ஜாதி பெயரை கூறி ஓட்டு கேட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். எனது தந்தை, தனது பெயரின் பின்பகுதியில் ஜாதி இல்லை. திமுக தமிழகத்தில் வலுவாக உள்ளது என செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK Durai Vaiko says that Tamilnadu people will defeat PM Narendra Modi if he contest in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X