முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி! கிளைச் செயலாளர் விடுத்த அழைப்பு!
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் செல்கிறார்.
முத்துராமலிங்கத் தேவர்: ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 30ஆம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர்: கடந்த 2 ஆண்டுகளாக பசும்பொன் செல்லாத எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராகிய பிறகு முதல் முறையாக இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் செல்கிறார். எக்ஸ் ஸ்பேசஸில் நேற்றிரவு உரை நிகழ்த்திய போது, கமுதி அருகே உள்ள கிளைச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க வருவதாக உறுதியளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி.
உற்சாக வரவேற்பு கொடுக்கத் திட்டம்: எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் மிரட்சியோடு பார்க்கின்றனர். தாங்கள் சார்ந்த சமுதாய ரீதியாக எதிர்ப்பு கிளம்பும் என்பதால் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லமாட்டார் என அவர்கள் கருதிய நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரையிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து பசும்பொன் அழைத்துச் செல்வதற்கான பணிகளை தென் மாவட்ட அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநாடு: கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக பொன்விழா மாநாட்டை நடத்திய எடப்பாடி பழனிசாமி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஏன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அவரது குருபூஜையில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications