ஒரிஜினல் ஓபிஎஸ்ஸை விடுங்க.. மற்ற பன்னீர் செல்வங்களுக்கு என்னென்ன சின்னம்? பட்டாணி முதல் விவசாயி வரை!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரோடு களத்தில் இருக்கும் மற்ற OPSகளுக்கு என்னென்ன சின்னம் என பார்க்கலாம்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளராக கடந்த 25ஆம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அடுத்தடுத்து ஷாக் கொடுத்த பன்னீர் செல்வங்கள்: அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தன. அன்று மாலை உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். மறுநாள் காலை ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து திருமங்கலம் வாகைகுளத்தைச் சேர்ந்த ஒச்சாத் தேவர் மகன் பன்னீர்செல்வம், சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் ஆகியோரும் சுயேச்சை வேட்பாளர்களாக ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
களத்தில் பல ஓபிஎஸ்: மேலும் புதன்கிழமை அன்று மதுரை கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் என்பவரும் மனுத் தாக்கல் செய்தார். இதனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்த்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட்டிராதவர்கள்.
27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அடுத்த நாள் வேட்புமனுக்கள் பரீசிலனை செய்யப்பட்டன. இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனு உட்பட பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்தார். பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஒருவரது மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது.
சதி: ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், அவரைப் போன்றே பன்னீர்செல்வம் என்ற பெயருடன் பலர் வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே மேலும் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து, அவர்களது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் சிதறும் எனக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் பல அப்பாவிகளை கொண்டு வந்து வேட்பாளர்களாக நிறுத்தி எடப்பாடி பழனிசாமி சதி செய்துள்ளதாகவும், எனினும் எத்தனை பேர் ஓபிஎஸ் பெயரில் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை என்றும் வெற்றி எங்களுக்குத்தான் என்றும் கூறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பலாப்பழம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாளி, பலாப்பழம், திராட்சை ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்குமாறு கோரியிருந்தார். வாளி சின்னம் ஓபிஎஸ்ஸின் முதன்மை சாய்சாக இருந்தது. ஓபிஎஸ் பெயரில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள மற்ற 4 பேரும் தங்களுக்கும் வாளி சின்னம் கேட்டிருந்தனர். இதனால், வாளி சின்னம் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவர் போட்டியிடுகிறார்.
மற்ற ஓபிஎஸ்களுக்கு என்னென்ன சின்னம்?: வாளி சின்னம் குலுக்கல் முறையில் மதுரை வாகைக்குளத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒச்சாத்தேவர் மகனான பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் தெற்கு காட்டூரை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குலுக்கலில் மிஸ்ஸான வாளி.. மன்சூர் அலிகானை போல் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு..
பட்டாணி, திராட்சை: ராமநாதபுரம் கங்கைகொண்டானை சேர்ந்த மலையாண்டி மகன் பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோருக்கு எதிராகப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், தனது பெயரிலேயே நிற்கும் மற்ற ஓபிஎஸ்கள் வாக்குகளை பிரிப்பதை எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications