சேரை தூக்கி எறிந்து நிர்வாகிகள் கூட்டத்தில் சண்டை.. ராமநாதபுரம் பாஜகவில் ஓயாத தகராறு.. என்னாச்சு?
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்ட நிலையில், பாஜக கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் - முன்னாள் நிர்வாகிகள் சேரை தூக்கி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக பொறுப்பாளர் ஒருவரின் ஓட்டுநர் கூட்டத்தினரைப் பார்த்து கூச்சலிட்டதாகத் தெரிகிறது. ஆத்திரமடைந்த பிற நிர்வாகிகள் ஓட்டுநர் மீது நாற்காலியை வீசித் தாக்கினர். தாக்குதலால் புதிய நிர்வாகிகளுக்கும் முன்னாள் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்த இ.எம்.டி.கதிரவன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் கூண்டோடு கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி ஆர்.முருகேசன் என்பவரை நியமனம் செய்தார் அண்ணாமலை. புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், புதிய மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் நிர்வாகிகள் வெளியேறும் சமயத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவனின் ஆதரவாளர் ஒருவர் திடீரென புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிற நிர்வாகிகள் அந்த நபர் மீது நாற்காலியை வீசித் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலால் புதிய நிர்வாகிகளுக்கும் முன்னாள் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். நிர்வாகிகள் பாதுகாப்பாக கார்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். தகராறில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளரை போலீசார் அழைத்துச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications