Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க பத்திரப்பதிவு செய்யணுமா? சொத்து விற்பனை பத்திரப் பதிவில் மாற்றம்.. தமிழ்நாடு அரசு அதிரடி.. செம

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: பத்திரப்பதிவு முறைகளில் பொதுமக்களின் வசதிக்காக, எத்தனையோ மாற்றங்களும், அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், தற்போதும் முக்கிய அறிவிப்பு வெளியாகிய நிலையில், அதற்கு முட்டுக்கட்டையும் போடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், ஒரு நாளைக்கு, 100 முதல், 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.. இந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜரானால், உடனடியாக பத்திரப்பதிவு பணிகள் முடிந்து விடும்.

Good announcement by tamil nadu government and what are the instruction in bond registration

இதில், குறிப்பிட்ட நேரத்திற்கு விண்ணப்பதாரர்கள் வராதது, பணிகள் தாமதம் போன்ற காரணங்கள் ஏற்பட்டால், அந்த டோக்கன் நம்பர், அதே நாளில் வேறு நேரத்துக்கு மாற்றப்படும்.

இவ்வாறு நேரம் தவறும் டோக்கன்களுக்கு உரிய நபர்கள், ஒரே நேரத்தில் வருவதால், மாலையில் நீண்ட நேரம் பத்திரப்பதிவு நடத்தப்பட வேண்டியிருக்கிறது.. மேலும், இதனால், சார் - பதிவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிறைய சிரமம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.. இப்படியொரு சங்கடம் வராமல் இருக்க புது நடைமுறையை கொண்டுவர தமிழக அரசுக்கு யோசனை உள்ளதாம்.

டோக்கன் சிஸ்டம்: அதன்படி, டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் பதிவு நடக்கவில்லை என்றால், அந்த டோக்கனை மறுமுறை பயன்படுத்த முடியாதபடி ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.. இதனால், தேவையின்றி அன்றைய தினம் முழுவதும் காத்திருக்கும் கூட்டமும் தவிர்க்கப்படும். இது தொடர்பாக, பதிவுத்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொன்னார்கள்.

அதேபோல, இன்னொரு அதிரடியும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்து வரதேவையில்லையாம்.. பத்திரப்பதிவிற்கு அதிகாரிகள் பணம் கேட்டால் பொதுமக்கள் யாரும் வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதையும் மீறி, புகார்கள் எங்காவது இருந்தால், உடனடியாக, பொதுமக்கள், இணைபதிவுத்துறை தலைவர் அல்லது பதிவுகளை செயலருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய கோரிக்கை: இந்நிலையில், ராமநாதபுரத்தில் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்தாண்டு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் ரூ.1.51 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை பதிவுத் துறையில் ரூ.25,000 கோடியும், வணிகவரித் துறையில் ரூ.10,032 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதிகாரிகள் கடினமாகவும், நேர்மையாக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

இப்போது போலிப் பத்திரப் பதிவு ஒழிந்திருக்கிறது. போலி பத்திரப்பதிவு புதிய சட்டத்தின்படி, இதுவரை 2,500 போலிப் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்ற விதி உள்ளது. கடந்த காலங்களில் உள்ள போலி பத்திரங்கள் கண்டறிந்து முற்றிலும் ஒழிக்கப்படும். போலி பத்திரங்களை ஒழிக்கவே ஆவண எழுத்தர்கள், இடைதரகர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன்: எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யபடுகிறது. இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. இடைத்தரகர்கள் மூலம் பதிவுத் துறையில் தவறு நடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்பவர்கள் அவர்களே வந்து அலுவலகத்தில் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

கோரிக்கை: ஆனால், அரசின் இந்த நடவடிக்கையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.. குறிப்பாக, தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கத்தின் சார்பில், அமைச்சர் மூர்த்தியிடம், பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் அரசு உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.. எனவே, அரசு இதுகுறித்து என்ன முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை.

இதனிடையே, தமிழகம் முழுதும் ஆய்வுக்கு ஒரே பொறியாளர் உள்ளதால், பல ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்தும் உரியவர்களுக்கு வழங்கப்படாமல் தேங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.. பத்திரப்பதிவு துறையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான கட்டடங்களை பதிவு செய்வதை மதிப்பீடு செய்ய உதவி செயற்பொறியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லையாம்..

பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் அந்தஸ்திலான, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிதான், மதிப்பீட்டுச் சான்றிதழ்களை தர முடியும்.. அதன் அடிப்படையில் தான், பதிவு செய்த பத்திரம் உரிமையாளருக்கு வழங்கப்படும்.. ஆனால், இதற்காக, உதவி செயற்பொறியாளர்கள் பற்றாக்குறையால், சொத்து ஆவணங்கள் தேங்கியுள்ளதாக சொல்கிறார்கள்..

விரைவில் பூர்த்தி: இதையடுத்து, ''உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியானது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே, விரைவில் அந்த இடங்கள் பூர்த்தியாகி, பணிகள் அனைத்தும் வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+