Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடைபெறுகிறது பாம்பன் பாலம்: 111 ஆண்டு கால மறக்க முடியாத ராமநாதபுரம் பொக்கிஷம்! மக்களின் பழைய நினைவு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: நம்முடைய பாம்பன் பாலத்தை யாராலும் மறக்க முடியாது.. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவது இந்த பாலம்தான்.. சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் முக்கிய பாதையும்கூட.. இப்போது தன்னுடைய 111 வருட கால பொக்கிஷம் இன்று தன்னுடைய பயணத்தை முடித்து கொள்கிறது...!!

கடந்த 1914ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் முக்கிய பாலமாக இருந்தது... இந்தியாவின் முதல் கடல்வழி ரயில் பாலமான இது, சுமார் 108 ஆண்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது.

Pamban Bridge Ramanathapuram Pamban Bridge old bridge removal Scherzer Span Rameswaram Madurai historic bridge

ராமநாதபுரம் பொக்கிஷம்

இந்த பாலம் வழியாக ரயில்கள், பயணிகள் மற்றும் சரக்குகள் பல ஆண்டுகள் பாதுகாப்பாக சென்றன. ஆனால், பாம்பன் கடல் பகுதியில் அதிக உப்புத்தன்மை கொண்ட காற்று வீசுவதால், பாலத்தின் இரும்புத் தூண்கள் மற்றும் இரும்பு அமைப்புகள் காலப்போக்கில் துருப்பிடித்து பலவீனமடைந்துவிட்டன..

புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட பிறகு, பழைய பாலத்தின் பராமரிப்புப் பணிகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பாலத்தின் உறுதித்தன்மை மேலும் குறைந்தது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் பழைய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

இந்த பாலத்தின் நடுப்பகுதியில் 225 அடி நீளமுள்ள "ஷெர்சர் ஸ்பான்" என்ற பகுதி உள்ளது. இந்த பகுதி கப்பல்கள் செல்லும்போது திறக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது... முன்பு இந்த ஸ்பான் 81 டிகிரி வரை திறந்து, கப்பல்கள் சுமார் 200 அடி தூரம் செல்ல வழி கொடுத்தது.

பழைய பாம்பன் பாலம்

கடைசியாக கடந்த ஜனவரி 20ம் தேதி இந்த ஸ்பான் திறக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.. அப்போது இந்திய கடலோர காவல் கப்பல், ஒரு சிறிய கப்பல் மற்றும் சில மீனவர்களின் படகுகள் இந்த கடல் வழியாக சென்றன.

ஆனால் இப்போது ஷெர்சர் ஸ்பானின் கியர் அமைப்புகள் கடுமையாக துருப்பிடித்துவிட்டன. சமீபத்தில் 25 தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும், அந்த பகுதியை 15 டிகிரிக்கு மேல் திறக்க முடியவில்லை. அதனால்தான், இந்த மையப்பகுதியை முழுமையாக அகற்ற முடிவு செய்யப்பட்டது.

புதிய பாம்பன் ரயில் பாலத்தை கட்டிய ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், பழைய பாலத்தை அகற்ற ஒப்பந்ததாரரை நியமித்துள்ளது... இனி மொபைல் கிரேன்கள் உதவியுடன் இரும்பு அமைப்புகளை வெட்டி அகற்றப்படும்.. இதனால் சுமார் 1,000 டன் எடையுள்ள இரும்பு மற்றும் கான்கிரீட் கழிவுகள் வெளியேறும். அவை மண்டபம் ரயில்வே யார்டில் கொண்டு போய் சேர்க்கப்படும்.

கடல்சார் வாரியம் அறிவிப்பு

இந்த பணிகள் நடைபெறும் காலத்தில் விபத்துகள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மே 31ம் தேதி வரை பாம்பன் கடல் கால்வாய் வழியாக கப்பல்கள், விசைப்படகுகள் மற்றும் மீனவர் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு கடல்சார் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாக்க திட்டமிட்டனர். ஆனால் இரும்பு அமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது...

விடைபெறுகிறது பாம்பன் பாலம்

அடுத்த 4 மாதங்களில் பாம்பன் பாலத்தை முழுமையாக அகற்றும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது... 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிலிருந்து அகற்றியபின், அதை ரயில் அருங்காட்சியத்தில் வைக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பும் ராமேஸ்வரம் மக்களிடம் நிலவி வருகிறது..

புதிய பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து, ராமேஸ்வரம் தீவின் போக்குவரத்துக்கு தொடர்ந்து உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், நூற்றாண்டை கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய பாம்பன் ரயில் பாலம், இப்போது எண்ணற்ற நினைவுகளுடன் விடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+