ராமர் பாலத்தை கண்டேன்.. நெகிழ்ச்சியுடன் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. எப்படி இருக்கு பாருங்க!
ராமநாதபுரம்: பாம்பனில் கடலுக்கு நடுவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதற்காக பிரதமர் மோடி இலங்கையில் இருந்து இன்று ஹெலிகாப்டரில் கடல் வழியாக பாம்பனை வந்தடைந்தார். அப்போது கடலில் ராமர் பாலத்தை தரிசனம் செய்ததாக பிரதமர் மோடி பரவசத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலுக்கு நடுவே ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலம் மிகவும் பழமையானது. இதனால் புதிய பாலம் என்பது அமைக்கப்பட்டது. இந்த புதிய பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த விழாவுக்காக பிரதமர் மோடி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்து இன்று ஹெலிகாப்டரில் அங்கிருந்து பாம்பனுக்கு வந்தார். அப்போது அவர் ஹெலிகாப்டரில் இருந்தபடி கடலை ரசித்தார்.
இதற்கிடையே தான் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி கடல் மேல் பறந்து பாம்பன் வந்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பிரதமர் மோடி கடல் அழகை ரசித்தார். அப்போது கடலில் திட்டுகள் தெரிந்தன். அதனை பார்த்த பிரதமர் மோடி ‛ராமர் பாலத்தை தரிசனம் செய்தேன்'' என்று வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ‛‛சிறிது நேரத்துக்கு முன்பு இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் சேதுவை (பாலம்) தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. இது ஒரு தெய்வீக தற்செயல் நிகழ்வாக அமைந்துள்ளது. அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இது நடந்தது. இரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. ராமர் நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சக்தியாக இருக்கிறார். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications