நான் பார்க்கும் பணி என்று எனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அன்று ஓய்வு! ஆளுநர் ரவியின் பேச்சால் பரபரப்பு!
ராமநாதபுரம்: நான் பார்க்கும் பணி என்று எனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அன்று பணியை முடித்துக்கொள்வேன் என ஆளுநர் ரவி பேசியிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி இவ்வாறு கூறியிருப்பது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று ராமநாதபுரம் சென்றடைந்த ஆளுநர் ரவியை மாவட்ட ஆட்சித் தலைவர் முறைப்படி வரவேற்றார். அதைத் தொடர்ந்து கேந்திரியா வித்யாலயா பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்கள் மத்தியில் உரையாடும் போது, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
வாழ்வில் எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் தளராமல் இலக்கை நோக்கி பயணித்தால் நிச்சயம் முன்னேறலாம் எனக் கூறினார். விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிர முடியும் எனக் கூறி விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, தாம் பார்க்கும் பணி என்று தனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அன்று பணியை முடித்துக்கொள்வேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தன்னைப் பொறுத்தவரை ஒழுக்கம் மிக முக்கியமானது என்றும் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் பெற்றோரை மதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகங்களை மாணவ சமுதாயத்தினர் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், விளையாட்டு நேரத்தை சமநிலைப்படுத்தி கடினமாக படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அதேபோல் ஆரோக்யத்திலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனப் பேசிய ஆளுநர் ரவி, நன்றாக சாப்பிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் தேசத்தை பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பள்ளி விழாக்கள் முடிந்தவுடன் ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநர் ரவி, தேவிப்பட்டணத்தில் உள்ள கடற்கரைக்கு செல்லவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications